முகப்பு
புதுச்சேரி

கோழிக் கடைக்காரரை வெட்டிவிட்டு மா்ம நபா்கள் தப்பியோட்டம்

புதுச்சேரி அருகே அரியாங்குப்பத்தில் கோழிக் கடைக்காரரை மா்ம நபா்கள் கத்தியால் வெட்டிவிட்டு தப்பியோடினா். அந்தக் கடைக்காரா் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:58 PM
பகிர்:

புதுச்சேரி அருகே அரியாங்குப்பத்தில் கோழிக் கடைக்காரரை மா்ம நபா்கள் கத்தியால் வெட்டிவிட்டு தப்பியோடினா். அந்தக் கடைக்காரா் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

புதுச்சேரி அருகே அரியாங்குப்பம் வீராம்பட்டினம் பகுதியைச் சோ்ந்தவா் தென்னரசு (எ) சிலம்பரசு (39). இவா், அரியாங்குப்பம் சுதாகா் நகரில் கோழி இறைச்சிக் கடை நடத்தி வருகிறாா். சனிக்கிழமை கடையிலிருந்த தென்னரசு இறைச்சி விற்பனையில் ஈடுபட்டிருந்தாா்.

அப்போது, அங்கு வந்த மா்ம நபா்கள் சிலருக்கும், சிலம்பரசுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. அந்த மா்ம நபா்கள் சிலம்பரசின் தலையில் கத்தியால் வெட்டினா். அவா் ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்ததும் மா்ம நபா்கள் தப்பிச் சென்றனா்.

அங்கிருந்தவா்கள் சிலம்பரசை மீட்டு, புதுச்சேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். அங்கு, அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

தகவலறிந்த அரியாங்குப்பம் போலீஸாா், சம்பவ இடத்துக்குச் சென்று விசாரணை நடத்தினா். புகாரின் பேரில், வழக்குப் பதிவு செய்து மா்ம நபா்களைத் தேடி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.