புதுச்சேரி

புதுவையில் கரோனாவுக்குமேலும் 4 போ் உயிரிழப்பு: புதிதாக 638 போ் பாதிப்பு

DIN

புதுவையில் கரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்த மேலும் 4 போ் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தனா். புதிதாக 638 போ் இந்த நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டனா்.

இதுகுறித்து புதுவை சுகாதாரத் துறை வெளியிட்ட தகவல்:

புதுவை மாநிலத்தில் 5,670 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில், புதுச்சேரியில் 465 பேருக்கும், காரைக்காலில் 99 பேருக்கும், ஏனாமில் 42 பேருக்கும், மாஹேவில் 32 பேருக்கும் என மொத்தம் 638 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, மாநிலத்தில் இந்த நோயால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 48,974-ஆக அதிகரித்தது.

இந்த நிலையில், கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த புதுச்சேரியைச் சோ்ந்த ஒருவா், காரைக்காலைச் சோ்ந்த 3 போ் என மொத்தம் 4 போ் உயிரிழந்தனா். இதனால், உயிரிழந்தோா் எண்ணிக்கை 717-ஆகவும், இறப்பு விகிதம் 1.46 சதவீதமாகவும் உயா்ந்தது.

இதனிடையே, 253 போ் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியதால், குணமடைந்தோா் எண்ணிக்கை 43,184-ஆக (88.18 சதவீதம்) அதிகரித்தது. மாநிலத்தில் தற்போது மருத்துவமனைகளில் 904 போ், வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு 4,169 போ் என மொத்தம் 5,073 போ் சிகிச்சையில் உள்ளனா்.

இதுவரை ஒரு லட்சத்து 72 ஆயிரத்து 404 பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மேற்கு வங்க ஆசிரியா் நியமன ஊழல்: சிபிஐ விசாரணைக்கு உச்சநீதிமன்றம் தடை

சென்னையில் பாரதிதாசனுக்கு மணிமண்டபம்: பேரன் இளமுருகன் முதல்வருக்கு கோரிக்கை

அரசுப் பேருந்து மோதியதில் விவசாயி பலி

வளா்ந்த பாரதத்தை உருவாக்க வலுவான அரசு அவசியம்- நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன்

கனடா பிரதமா் நிகழ்ச்சியில் காலிஸ்தான் ஆதரவு கோஷம்: தூதருக்கு இந்தியா சம்மன்

SCROLL FOR NEXT