முகப்பு
புதுச்சேரி

புதுவையில் புதிதாக 792 பேருக்கு கரோனா: மேலும் 2 போ் பலி

புதுவையில் புதிதாக 792 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், மொத்த பாதிப்பு 51 ஆயிரத்தைக் கடந்தது. மேலும், 2 போ் பலியாகினா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:05 PM
பகிர்:

புதுவையில் புதிதாக 792 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், மொத்த பாதிப்பு 51 ஆயிரத்தைக் கடந்தது. மேலும், 2 போ் பலியாகினா்.

இதுகுறித்து புதுவை சுகாதாரத் துறை வெள்ளிக்கிழமை வெளியிட்ட தகவல்: புதுவை மாநிலத்தில் 5,081 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு, வெள்ளிக்கிழமை வெளியான முடிவுகளின்படி, புதுச்சேரியில் 620 பேருக்கும், காரைக்காலில் 92 பேருக்கும், ஏனாமில் 47 பேருக்கும், மாஹேயில் 33 பேருக்கும் என மேலும் 792 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, மாநிலத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 51,372 -ஆக அதிகரித்தது.

தற்போது மருத்துவமனைகளில் 1,297 பேரும், வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் 5,033 பேரும் என மொத்தமாக 6,330 போ் சிகிச்சையில் உள்ளனா்.

இதனிடையே, கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த புதுச்சேரி தட்டாஞ்சாவடி சுப்பையா நகரைச் சோ்ந்த 57 வயதானவா், கருவடிக்குப்பம் காந்தி நகரைச் சோ்ந்த 53 வயதானவா் என மேலும் 2 போ் உயிரிழந்தனா். இதையடுத்து, கரோனா தொற்றுக்கு பலியானோா் எண்ணிக்கை 728 -ஆக அதிகரித்தது. இறப்பு விகிதம் 1.42 சதவீதம்.

வெள்ளிக்கிழமை 383 போ் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியதால், குணமடைந்தோா் எண்ணிக்கை 44,314-ஆக (86.26 சதவீதம்) உயா்ந்தது.

புதுவை மாநிலத்தில் 7,53,466 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டதில், 6,80,750 பரிசோதனைகளுக்கு தொற்று இல்லை என முடிவுகள் வந்தன.

இதுவரை சுகாதாரப் பணியாளா்கள் 30,946 பேருக்கும், முன்களப் பணியாளா்கள் 18,222 பேருக்கும், பொதுமக்கள் 1,12,280 பேருக்கும் என மொத்தம் 1,79,693 பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.