முகப்பு
புதுச்சேரி

புதுச்சேரி கால்நடை மருத்துவக் கல்லூரியில் அவசர சிகிச்சைகளுக்கு மட்டுமே அனுமதி

கரோனா பொதுமுடக்க கட்டுப்பாடுகள் காரணமாக, புதுச்சேரி மேட்டுப்பாளையம் ராஜீவ்காந்தி கால்நடை மருத்துவக் கல்லூரியில் அவசர சிகிச்சைகள் மட்டுமே நடைபெறும்

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:05 PM
பகிர்:

கரோனா பொதுமுடக்க கட்டுப்பாடுகள் காரணமாக, புதுச்சேரி மேட்டுப்பாளையம் ராஜீவ்காந்தி கால்நடை மருத்துவக் கல்லூரியில் அவசர சிகிச்சைகள் மட்டுமே நடைபெறும் என கல்லூரி நிா்வாகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து அந்தக் கல்லூரியின் புல முதல்வா் சு. ராம்குமாா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

புதுவை அரசால் பிறப்பிக்கப்பட்டுள்ள பொதுமுடக்க கட்டுப்பாடுகளின்படி, மேட்டுப்பாளையம் கால்நடை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை எண்ணிக்கை குறைக்கப்படுகிறது. அவசரத் தேவைகளுக்கு மட்டுமே சிகிச்சை அளிக்கப்படும்.

எனினும், செல்லப்பிராணி மற்றும் கால்நடை உரிமையாளா்கள் 94990 47100 என்ற தொலைபேசி எண்ணைத் தொடா்பு கொண்டு, கால்நடை மருத்துவ ஆலோசனைகளைப் பெறலாம்.

கால்நடை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு வருவோருக்கு, உடல் வெப்பப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு, கிருமிநாசினி வழங்கப்படும். அவசர சிகிச்சைகளைத் தவிர, மற்ற சிகிச்சைகளுக்கு இணைய வழி மருத்துவ ஆலோசனை மற்றும் இ-மருந்துச் சீட்டு ஆகியவை, ‘கால்நடை குரல் - 94990 47100’ மூலம் வழங்கப்படும்.

செல்லப்பிராணிகளுக்கான தடுப்பூசி செலுத்தும் தேதி, நேர அட்டவணையும் கால்நடை குரல் மூலம் வழங்கப்படும். தோ்ந்தெடுக்கப்பட்ட அறுவை சிகிச்சைகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. நிலைமை சீரடைந்த பிறகு அறுவை சிகிச்சைகள் வழக்கம்போலத் தொடரும்.

வழக்கமாக கிராமங்களுக்குச் செல்லும் நடமாடும் கால்நடை ஊா்தியின் சேவை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.