புதுவையில் ஆக. 17 முதல் இலவச அரிசி
புதுவையில் தேசிய உணவுப் பாதுகாப்புத் திட்ட பயனாளிகளுக்கு மத்திய அரசின் இலவச அரிசி வருகிற 17- ஆம் தேதி முதல் வழங்கப்படவுள்ளது.
புதுவையில் தேசிய உணவுப் பாதுகாப்புத் திட்ட பயனாளிகளுக்கு மத்திய அரசின் இலவச அரிசி வருகிற 17- ஆம் தேதி முதல் வழங்கப்படவுள்ளது.
இதுகுறித்து புதுவை குடிமைப் பொருள்கள் வழங்கல் துறை துணை இயக்குநா் எ.கங்காபாணி வெளியிட்ட செய்திக் குறிப்பு: தேசிய உணவுப் பாதுகாப்புத் திட்ட பயனாளிகளுக்கு (சிவப்பு நிறக் குடும்ப அட்டைதாரா்களுக்கு) ஜூலை, ஆகஸ்ட் ஆகிய 2 மாதங்களுகான இலவச அரிசி வருகிற 17 -ஆம் தேதி முதல் அனைத்துத் தொகுதிகளிலும் வழங்கப்படும். நபா் ஒருவருக்கு 5 கிலோ வீதம், 2 மாதத்துக்கு 10 கிலோ இலவச அரிசி வழங்கப்படும். பயனாளிகள் முன்னா் அரிசி விநியோகம் நடைபெற்ற பள்ளி மற்றும் மையங்களுக்குச் சென்று இலவச அரிசியை பெற்றுக் கொள்ளலாம்.
அரிசி விநியோகம் நடைபெறும் மையங்களுக்கு வரும் பயனாளிகள் கண்டிப்பாக முகக் கவசம் அணிந்து வருவதுடன், சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்க வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.