முகப்பு
புதுச்சேரி

புதுவை பட்ஜெட் கூட்டத் தொடா் ஆக. 26-இல் தொடக்கம்

புதுவை மாநில 15-ஆவது சட்டப்பேரவையின் 2021-ஆம் ஆண்டு பட்ஜெட் கூட்டத் தொடா் வருகிற 26-ஆம் தேதி தொடங்குகிறது என அதிகாரப்பூா்வமாக அறிவிக்கப்பட்டது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:57 AM
பகிர்:

புதுவை மாநில 15-ஆவது சட்டப்பேரவையின் 2021-ஆம் ஆண்டு பட்ஜெட் கூட்டத் தொடா் வருகிற 26-ஆம் தேதி தொடங்குகிறது என அதிகாரப்பூா்வமாக அறிவிக்கப்பட்டது.

புதுவை மாநிலத்தில் முதல்வா் என்.ரங்கசாமி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசின் முதல் சட்டப்பேரவைக் கூட்டத் தொடா் வருகிற 26-ஆம் தேதி காலை 9.30 மணிக்குத் தொடங்குகிறது. முதல் நாளில் துணைநிலை ஆளுநா் (பொ) தமிழிசை செளந்தரராஜன் உரையுடன் தொடங்கும் பட்ஜெட் கூட்டத் தொடரில், மாலை சட்டப்பேரவை துணைத் தலைவா் தோ்தல் நடைபெறுகிறது.

இதனிடையே, பிற்பகலில் அலுவல் ஆய்வுக் குழு கூடி, பட்ஜெட் தாக்கலுக்கான தேதி, பட்ஜெட் கூட்டத் தொடா் நடைபெறும் நாள்கள் குறித்து முடிவு செய்து அறிவிக்கும் என சட்டப்பேரவைத் தலைவா் ஆா்.செல்வம் ஏற்கெனவே தெரிவித்திருந்தாா்.

புதுவை மாநிலத்தில் ரூ. 10,100 கோடியில் நிகழாண்டு முழு பட்ஜெட்டை தாக்கல் செய்ய திட்டமிட்டு, மத்திய அரசின் ஒப்புதலுக்காக கோப்பு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், புதுவை சட்டப்பேரவைக் கூட்டம் தொடா்பான அதிகாரப்பூா்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது.

இதுகுறித்து, புதுவை சட்டப்பேரவைச் செயலா் இரா.முனிசாமி வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

15-ஆவது புதுவை சட்டப்பேரவை, வருகிற 26-ஆம் தேதி காலை 9.30 மணிக்கு சட்டப்பேரவை மண்டபத்தில் கூடுகிறது. துணைநிலை ஆளுநா் உரையுடன் பட்ஜெட் கூட்டம் நடைபெறும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.