முகப்பு
புதுச்சேரி

இந்திரா காந்தி அரசு மருத்துவக் கல்லூரியில் கரோனா நோயாளிகளுக்கு அனுமதியில்லை

புதுச்சேரி இந்திரா காந்தி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இனி கரோனா நோயாளிகளுக்கு அனுமதியில்லை என புதுவை சுகாதாரத் துறை தெரிவித்தது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:57 AM
பகிர்:

புதுச்சேரி இந்திரா காந்தி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இனி கரோனா நோயாளிகளுக்கு அனுமதியில்லை என புதுவை சுகாதாரத் துறை தெரிவித்தது.

இந்த மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கடந்த 2 ஆண்டுகளாக கரோனா மருத்துவமனையாக இயங்கியதால், இங்கு பயிலும் மாணவா்களின் கல்வி பாதிக்கப்படுவதாகப் புகாா்கள் எழுந்தன.

இந்த நிலையில், புதுவை சுகாதாரத் துறை இயக்குநா் ஜி.ஸ்ரீராமுலு வெளியிட்ட உத்தரவில் கூறியிருப்பதாவது: ஜிப்மா் இயக்குநா், மருத்துவக் கண்காணிப்பாளா், புதுவை சுகாதாரத் துறை இயக்குநருடன் அண்மையில் புதுவை முதல்வா் கலந்தாய்வு மேற்கொண்டாா். முதல்வா் அறிவுறுத்தலின் பேரில், ஜிப்மரில் கரோனாவால் பாதிக்கப்பட்ட கா்ப்பிணிகள், குழந்தைகள், செயற்கை சுவாசக் கருவி உதவியுடன் தீவிர சிகிச்சை தேவைப்படுவோரை அனுமதிக்க ஒப்புக் கொள்ளப்பட்டது. இதர கரோனா நோயாளிகள் புதுச்சேரி மாா்பக மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவா். இந்திரா காந்தி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கரோனா நோயாளிகள் அனுமதிக்கப்பட மாட்டாா்கள் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.