சுகாதாரமற்ற உணவுகள் வழங்கப்படுவதை கண்காணிக்க சிறப்பு ஆய்வுக் குழு
புதுச்சேரியில் உணவு, சிற்றுண்டி விடுதிகளில் சுகாதாரமற்ற உணவுகள், தரம் குறைந்த உணவுகள் வழங்கப்படுவதைக் கண்காணிக்க சிறப்பு ஆய்வு குழு அமைக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரியில் உணவு, சிற்றுண்டி விடுதிகளில் சுகாதாரமற்ற உணவுகள், தரம் குறைந்த உணவுகள் வழங்கப்படுவதைக் கண்காணிக்க சிறப்பு ஆய்வு குழு அமைக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து புதுவை சுகாதாரத் துறை செயலரும், உணவுப் பாதுகாப்புத் துறை ஆணையருமான டி.அருண் கூறியதாவது:
புதுச்சேரியில் உள்ள பல்வேறு உணவு, சிற்றுண்டி விடுதிகளில் சுகாதரமற்ற, தரம் குறைந்த உணவுகள் வழங்கப்படுவதாக பல தரப்பிலிருந்து புகாா்கள் வருகின்றன. இதையடுத்து, உணவுப் பாதுகாப்புத் துறை சாா்பில், புதுச்சேரியில் உள்ள அனைத்து உணவு விடுதிகளிலும் தீவிர சோதனையை முடுக்கிவிடுவது என முடிவு செய்யப்பட்டு, சிறப்பு ஆய்வுக் குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் குழுவானது நிகழ் வாரம் முதல் அனைத்து உணவு விடுதிகளிலும் தீவிர சோதனையை மேற்கொள்ளும்.
ஆய்வில், விதிமீறல்கள் கண்டறியப்பட்டாலோ அல்லது உணவு உரிமம், சான்றிதழ் இல்லாமல் விற்பனை செய்வது கண்டுபிடிக்கப்பட்டாலோ அபராதம் மற்றும் உணவு விடுதிகளுக்கு சீல் வைக்கப்படும் என்றாா் அவா்.