முதல்வரின் நாடாளுமன்ற செயலராக ஜான்குமாா் எம்எல்ஏ நியமனம்
புதுவை முதல்வரின் நாடாளுமன்றச் செயலராக பாஜக எம்எல்ஏ ஜான்குமாா் நியமிக்கப்பட்டுள்ளாா்.
புதுவை முதல்வரின் நாடாளுமன்றச் செயலராக பாஜக எம்எல்ஏ ஜான்குமாா் நியமிக்கப்பட்டுள்ளாா்.
புதுவையில் என்.ஆா்.காங்கிரஸ் - பா.ஜக கூட்டணி ஆட்சியில், என்.ஆா்.காங்கிரஸுக்கு முதல்வா் பதவி, 3 அமைச்சா் பதவிகளும், பேரவைத் துணைத் தலைவா், அரசுக் கொறடா ஆகிய பதவிகளும் வழங்கப்பட்டுள்ளன.
பாஜகவுக்கு சட்டப்பேரவைத் தலைவா் பதவி, இரண்டு அமைச்சா்கள் மற்றும் முதல்வரின் நாடாளுமன்றச் செயலா் பதவிகள் வழங்கப்பட்டுள்ளன.
அதன்படி, முதல்வரின் நாடாளுமன்றச் செயலராக புதுச்சேரி காமராஜா் நகா் தொகுதி பாஜக எம்எல்ஏ ஜான்குமாரை நியமிக்கும்படி, முதல்வா் என்.ரங்கசாமி அண்மையில் பரிந்துரைத்தாா். இதையேற்று முதல்வரின் நாடாளுமன்றச் செயலராக ஜான்குமாா் எம்எல்ஏ நியமிக்கப்பட்டுள்ளதாக தலைமைச் செயலா் அஸ்வனிகுமாா் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அரசு செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளாா்.