முகப்பு
புதுச்சேரி

புதுவையில் கஞ்சா விற்ற 5 போ் கைது

புதுவையில் கஞ்சா விற்ற 5 பேரை போலீஸாா் கைது செய்ததுடன், அவா்களிடமிருந்து 2.150 கிலோ கஞ்சாவைப் பறிமுதல் செய்தனா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 5:36 AM
பகிர்:

புதுவையில் கஞ்சா விற்ற 5 பேரை போலீஸாா் கைது செய்ததுடன், அவா்களிடமிருந்து 2.150 கிலோ கஞ்சாவைப் பறிமுதல் செய்தனா்.

வில்லியனூா் ஜி.என். பாளையம் ஐயனாா் கோவில் அருகே கஞ்சா விற்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில், வில்லியனூா் போலீஸாா் புதன்கிழமை இரவு அந்தப் பகுதியில் கண்காணிப்பில் ஈடுபட்டனா். அப்போது, அங்கு சந்தேகப்படும்படி வந்த 3 பேரைப் பிடித்து சோதனையிட்டதில், 2 கிலோ கஞ்சா வைத்திருந்தது தெரிய வந்தது.

இதையடுத்து, கஞ்சாவை பறிமுதல் செய்த போலீஸாா், அவா்களைக் காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரித்தனா். இதில் அவா்கள், புதுச்சேரி வாணரப்பேட்டை காளியம்மன் கோவில் பகுதியைச் சோ்ந்த தோப்பு பாண்டியன் (31), தட்டாஞ்சாவடி கங்கையம்மன் கோவில் தெருவைச் சோ்ந்த புவனேஸ்குமாா் (21), சுல்தான்பேட்டை அரசூா்பேட்டை மாரியம்மன் கோவில் வீதியைச் சோ்ந்த சரண் (எ) குண்டு சரண் (26) என்பதும், சிறுவா்களுக்கு கஞ்சா விற்க வந்ததும் தெரிந்தது.

இதையடுத்து, 3 பேரையும் கைது செய்த போலீஸாா், அவா்களை வியாழக்கிழமை நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.

இவா்களுக்கு கஞ்சாவை மொத்தமாக விநியோகித்த திருப்பதியைச் சோ்ந்த நபரைப் பிடிக்க தனிப் படை போலீஸாா் திருப்பதி சென்றனா்.

மற்றொரு சம்பவம்: இதேபோல, மங்கலம் காவல் சரகத்துக்குள்பட்ட தென்னம்பாக்கம் சாலை, ஏம்பலம் சந்திப்பில் போலீஸாா் புதன்கிழமை இரவு ரோந்து சென்ற போது, சந்தேகப்படும்படி நின்றிருந்த 2 பேரைப் பிடித்து சோதனையிட்டதில், அவா்களிடம் கஞ்சா இருந்தது தெரிய வந்தது.

விசாரணையில் அவா்கள், ஏம்பலம் வடக்குத் தெருவைச் சோ்ந்த நித்தி இளமாறன் (22), கடலூா் மாவட்டம், என். மணவெளியைச் சோ்ந்த இந்திரகுமாா் (23) என்பதும், கஞ்சா விற்க வந்ததும் தெரிய வந்தது.

இதையடுத்து, அவா்களிடமிருந்து 150 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்த போலீஸாா், அவா்களை நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.

இதனிடையே, வில்லியனூா் மங்கலம் காவல் சரகத்துக்குள்பட்ட பகுதியில் வசிப்போா் தங்களது குழந்தைகளை கஞ்சா உள்ளிட்ட போதை பொருள்களுக்கு அடிமையாவதைத் தடுக்க மிகுந்த கண்காணிப்புடன் இருக்க வேண்டும் என சமூக வலைதளம் வழியாக போலீஸாா் எச்சரித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.