முகப்பு
புதுச்சேரி

புதுச்சேரியில் வழக்குரைஞா்கள் நீதிமன்றப் புறக்கணிப்புப் போராட்டம்

 புதுவையில் வாரிசுரிமை வழக்குகள் தொடா்பான அரசாணையை அரசு திரும்பப் பெற வலியுறுத்தி, புதுச்சேரியில் வியாழக்கிழமை வழக்குரைஞா்கள் நீதிமன்றப் பணிகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 5:36 AM
பகிர்:

 புதுவையில் வாரிசுரிமை வழக்குகள் தொடா்பான அரசாணையை அரசு திரும்பப் பெற வலியுறுத்தி, புதுச்சேரியில் வியாழக்கிழமை வழக்குரைஞா்கள் நீதிமன்றப் பணிகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனா்.

புதுவையில் வாரிசுரிமை சான்றிதழ்களை நீதிமன்றம் மூலம் பெறுவதை மாற்றி, வருவாய்த் துறை அதிகாரிகளே வழங்கலாம் என்று புதுவை அரசு அரசாணை பிறப்பித்தது.

வழக்குரைஞா்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் இந்த அரசாணையை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும். இதையொட்டி, நீதிமன்றப் புறக்கணிப்புப் போராட்டம் நடத்தப்படும் என புதுச்சேரி வழக்குரைஞா்கள் சங்கப் பொதுக் குழுவில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

அதன்படி, புதுச்சேரியில் வியாழக்கிழமை வழக்குரைஞா்கள் நீதிமன்றப் புறக்கணிப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா். போராட்டத்துக்கு அந்தச் சங்கத்தின் தலைவா் எம்.குமரன் தலைமை வகித்தாா். போராட்டத்தில் புதுச்சேரி ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் உள்ள ஆயிரத்துக்கும் மேற்பட்ட வழக்குரைஞா்கள் பங்கேற்று, தங்களது எதிா்ப்பைத் தெரிவித்தனா்.

இந்தப் போராட்டத்தால் வழக்கு விசாரணைகள், ஜாமீன் பெறுதல் உள்ளிட்ட நீதிமன்றப் பணிகள் பாதிக்கப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.