முகப்பு
புதுச்சேரி

புதுவை மின்துறை தனியார்மய நடவடிக்கை: பணியைப் புறக்கணித்து ஊழியர்கள் போராட்டம்

புதுவை மின்துறையை தனியார்மயமாக்கக் கூடாது என வலியுறுத்தி, மின்துறை ஊழியர்கள் மற்றும் தொழிலாளர்கள் புதன்கிழமை ஒரு நாள் பணிப் புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 5:39 AM
பணியைப் புறக்கணித்து ஊழியர்கள் போராட்டம்
பகிர்:

புதுச்சேரி:  புதுவை மின்துறையை தனியார்மயமாக்கக் கூடாது என வலியுறுத்தி, மின்துறை ஊழியர்கள் மற்றும் தொழிலாளர்கள் புதன்கிழமை ஒரு நாள் பணிப் புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

புதுவை மின் துறையை தனியார் மயமாக்கும் நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்துள்ளதால், அது தொடர்பாக டிசம்பர் 9 மற்றும் 10 ஆகிய தேதிகளில் புதுச்சேரியில் கருத்து கேட்பு கூட்டம் நடத்தப் படுவதாக அனைத்து மின்துறை பொறியாளர்களுக்கும், தொழிலாளர்களுக்கும் சுற்றறிக்கை விடப்பட்டுள்ளது.

இந்நிலையில், புதுச்சேரி மின் துறையை தனியார் மயமாக மாற்றக்கூடாது என்று வலியுறுத்தியும், கருத்து கேட்புக் கூட்டத்தை புறக்கணிக்கும் வகையிலும் புதுச்சேரி மின்துறை பொறியாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் தனியார்மய எதிர்ப்பு போராட்டக் குழு சார்பில், இன்று புதுச்சேரி மின்துறை தலைமையகத்தில் பணி புறக்கணிப்பு போராட்டம் நடைபெறுகிறது.

புதுச்சேரி உப்பளம் பகுதியில் உள்ள தலைமை மின் துறை அலுவலகத்தில் பொறியாளர்கள் முதல் தொழிலாளர்கள் வரை 200க்கும் மேற்பட்டோர் திரண்டு ஒரு நாள் பணியைப் புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

புதுவை மின் துறையை தனியார் மயமாக்கக் கூடாது என்றும், மின்துறை ஊழியர்கள், பொதுமக்களிடம் கருத்து கேட்காமல் புதுவை மாநில அரசு மின்துறை தனியார் மையத்துக்கு ஒத்துழைக்கக் கூடாது எனவும்  வலியுறுத்தினர்.

மின் துறையின் பெரும்பாலான ஊழியர்கள் இந்தப் பணி புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் புதன்கிழமை மின் கட்டணம் செலுத்துதல், மின்சார பழுது நீக்குதல், பராமரித்தல் உள்ளிட்ட அத்தியாவசிய பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன.

முழு கட்டுரையைப் படிக்க →