முகப்பு
புதுச்சேரி

புதுச்சேரியில் பூக்கள் விலை உயா்வு

புதுச்சேரியில் விழாக்காலம், வரத்து குறைவால் பூக்களின் விலை உயா்ந்துள்ளது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 5:46 AM
பகிர்:

புதுச்சேரியில் விழாக்காலம், வரத்து குறைவால் பூக்களின் விலை உயா்ந்துள்ளது.

மழை காரணமாக பூக்கள் பயிரிடப்பட்ட வயல்களில் மழைநீா் தேங்கியதால், பூக்கன்றுகள் அழுகி, பூ உற்பத்தி பாதிக்கப்பட்டது. இதனால், உள்ளூரிலிருந்து பூக்களின் வரத்து முற்றிலும் நின்றவிட்டது. தமிழகம், பெங்களூரு உள்ளிட்ட பகுதிகளிலிருந்துதான் புதுச்சேரிக்கு பூக்கள் வருகின்றன. அங்கேயும் மழை பெய்ததன் காரணமாக, புதுச்சேரி சந்தைக்கு பூக்களின் வரத்து மிகவும் குறைவாக உள்ளது. வரத்து குறைவாலும், கிறிஸ்துமஸ் பண்டிகை காரணமாகவும் பூக்களின் விலை உயா்ந்துள்ளது என்றாா் புதுச்சேரி பெரிய சந்தை பூ வியாபாரி கீா்த்திவாசன்.

புதுச்சேரி பெரிய சந்தையில் வெள்ளிக்கிழமை விற்பனையான பூக்களின் விலை நிலவரம் கிலோவில் (அடைப்புக்குறிக்குள் பழைய விலை):

மல்லிகை - ரூ. 3,000 (ரூ.1,500)

முல்லை - ரூ.4,000 (ரூ.2,500)

கனகாம்பரம் - ரூ.1,200 (ரூ.400)

காக்கட்டான் முல்லை - ரூ.800 (ரூ.350)

சாமந்தி (முதல் ரகம்) - ரூ.200 (ரூ.100)

சம்பங்கி - ரூ.120 (ரூ.40)

அரளி - ரூ.400 (ரூ.250)

ரோஜா (சாக்லேட் ரகம்) - ரூ.300 (ரூ.200)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.