கோப்புப்படம் 
புதுச்சேரி

கிரண் பேடியின் நீக்கம் புதுவை மக்களின் வெற்றி: முதல்வர் நாராயணசாமி

​புதுச்சேரி துணைநிலை ஆளுநர் பொறுப்பிலிருந்து கிரண் பேடி நீக்கப்பட்டிருப்பது புதுவை மக்களுக்குக் கிடைத்த வெற்றி என முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.

DIN


புதுச்சேரி துணைநிலை ஆளுநர் பொறுப்பிலிருந்து கிரண் பேடி நீக்கப்பட்டிருப்பது புதுவை மக்களுக்குக் கிடைத்த வெற்றி என முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.

இதுபற்றி செவ்வாய்க்கிழமை செய்தியாளர் சந்திப்பில் அவர் கூறியது:

"கிரண் பேடியின் நீக்கம் புதுவை மக்களுக்குக் கிடைத்த வெற்றி. மக்கள் உரிமைகளைப் பறிக்கின்றவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் தூக்கி எறியப்படுவார்கள். தனித்தன்மையைப் பாதுகாக்க சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தியின் அறிவுரையோடு நடத்திய போராட்டத்தின் விளைவு புதுவை மக்களின் உரிமைகள் காக்கப்பட்டிருக்கின்றன.

இது மதச்சார்பற்ற கூட்டணிக் கட்சிகளுக்கு மட்டுமின்றி புதுவை மக்களுக்கும் கிடைத்த மிகப் பெரிய வெற்றி

புதுவை உரிமைகளைக் காக்கின்ற பொறுப்பு எங்களுக்கு இருக்கிறது. அந்தக் கடைமையை நாங்கள் செய்திருக்கிறோம்" என்றார் நாராயணசாமி.

சற்று முன்பு, தெலங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜனுக்கு புதுச்சேரி துணைநிலை ஆளுநராக கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஆழிக்கருகில் அன்பின் வெளிப்பாடு... ஸ்வாசிகா!

அரசியல் அனுபவமில்லை, இருந்தாலும்... பிகாரின் இளம் வயது வேட்பாளரின் வாக்குறுதிகள்!

கனிகளிலே அவள் மாங்கனி... நியா சர்மா!

ஜப்பானில் அதிகரிக்கும் கரடி தாக்குதல்! களமிறங்கிய படைகள்!

பச்சை என்பது உற்சாகம்... அஞ்சு குரியன்!

SCROLL FOR NEXT