புதுச்சேரி

பெண்ணின் குற்றச்சாட்டை மொழிபெயர்ப்பில் 'மறைத்து' ராகுலிடம் கூறிய நாராயணசாமி: வைரலாகும் விடியோ

​புதுச்சேரியில் தன்மீது பெண்மணி ஒருவர் கூறிய புகாரை காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தியிடம் முதல்வர் நாராயணசாமி மாற்றி மொழிபெயர்த்துள்ள விடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.

DIN


புதுச்சேரியில் தன்மீது பெண்மணி ஒருவர் கூறிய குற்றச்சாட்டை மறைத்து காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தியிடம் முதல்வர் நாராயணசாமி மாற்றி மொழிபெயர்த்துள்ள விடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.

ராகுல் காந்தி தேர்தல் பிரசாரம் மேற்கொள்ள புதன்கிழமை புதுச்சேரி வந்தடைந்தார். தமிழகத்தைப் போல் புதுவையிலும் ஒரு கூட்டத்தில் அவர் மக்களிடம் கருத்துகளைக் கேட்டு வந்தார். மக்கள் கூறும் கருத்துகளை மொழிபெயர்ப்பவராக முதல்வர் நாராயணசாமி இருந்தார்.

அந்தக் கூட்டத்தில் பெண் ஒருவர், 'கடலோரப் பகுதி இப்படியேதான் இருக்கிறது. எங்களுக்கு யாரும் ஆதரவு தருவதில்லை. அவரே (முதல்வர் நாராயணசாமி) இருக்கிறாரே, புயலின்போது எங்களை வந்து பார்த்திருக்கிறாரா?' என்று வெளிப்படையாக கேள்வி எழுப்பினார்.

ஆனால், இதை ராகுலிடம் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துக் கூறிய நாராயணசாமி, "நிவர் புயலின்போது நான் இந்தப் பகுதியைப் பார்வையிட்டு அவர்களுக்கு நிவாரணம் வழங்கினேன். அதைத்தான் அவர் கூறுகிறார்" என்றார்.

நாராயணசாமியின் இந்த மொழிபெயர்ப்பு விடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.

விடியோ:

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஆழிக்கருகில் அன்பின் வெளிப்பாடு... ஸ்வாசிகா!

அரசியல் அனுபவமில்லை, இருந்தாலும்... பிகாரின் இளம் வயது வேட்பாளரின் வாக்குறுதிகள்!

கனிகளிலே அவள் மாங்கனி... நியா சர்மா!

ஜப்பானில் அதிகரிக்கும் கரடி தாக்குதல்! களமிறங்கிய படைகள்!

பச்சை என்பது உற்சாகம்... அஞ்சு குரியன்!

SCROLL FOR NEXT