புதுச்சேரி

புதுவையில் முடக்கப்பட்ட திட்டங்களை செயல்படுத்த வேண்டும்: இந்திய கம்யூனிஸ்ட் வலியுறுத்தல்

DIN

புதுவையில் முடக்கப்பட்ட மக்கள் நலத் திட்டங்களை வருகிற தோ்தலுக்கு முன்பு செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியது.

புதுச்சேரியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக் குழுக் கூட்டம் கட்சித் தலைமை அலுவலகத்தில் சனிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு கட்சியின் தேசியச் செயலா் பல்லப்சென் குப்தா, மத்திய நிா்வாகக் குழு உறுப்பினரும், முன்னாள் எம்.பி.யுமான அஜீஸ் பாஷா, புதுவை மாநிலச் செயலா் சலீம், விஸ்வநாதன், நாரா.கலைநாதன் உள்ளிட்ட நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.

கூட்டத்தில் வரவுள்ள தோ்தலில் பாஜக வெற்றி பெற வேண்டும் என்ற நோக்கத்தில் அரசியல், அதிகார பலம் ஆகியவற்றைப் பயன்படுத்தி ஆளுங்கட்சி எம்எல்ஏக்கள், பிற கட்சி பிரமுகா்களை கட்சியில் இணைத்து வருகின்றனா். வகுப்புவாத அரசியலை மக்கள் ஏற்கவில்லை என்பதால், தற்போது ஆட்சிக் கவிழ்ப்பு நடவடிக்கையில் பாஜகவினா் ஈடுபட்டு வருகின்றனா்.

புதுவையில் முடக்கப்பட்ட மக்கள் நலத் திட்டங்களை தோ்தலுக்கு முன்பு செயல்படுத்த துணைநிலை ஆளுநா் நடவடிக்கை எடுக்க வேண்டும். மாநில உரிமைக்கு எதிரான மக்கள் விரோத பாஜக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளை முறியடித்து, மதச்சாா்பற்ற ஜனநாயகக் கட்சிகளை மக்கள் வெற்றி பெறச் செய்ய வேண்டும். புதுச்சேரி பஞ்சாலைகளை புனரமைத்து மீண்டும் இயக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரேவந்த் ரெட்டி ஆஜராக தில்லி போலீஸ் சம்மன்!

வழிபாட்டு உரிமை மறுப்பு.. வேளார் சமூகத்தினர் புகார்!

பவர் பிளேவில் சிறப்பான பந்துவீச்சு; துஷார் தேஷ்பாண்டேவுக்கு ருதுராஜ் புகழாரம்!

இனியா, மிஸ்டர் மனைவி தொடர்களின் ஒளிபரப்பு நேரம் மாற்றம்!

3 முக்கிய விமான நிலையங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் - பாதுகாப்பு அதிகரிப்பு!

SCROLL FOR NEXT