முகப்பு
புதுச்சேரி

புதுச்சேரி ஆட்சியருக்கு நச்சு கலந்த குடிநீா் விநியோகம்: போலீஸாா் விசாரணை

புதுச்சேரி மாவட்ட ஆட்சியா் பூா்வா காா்க்குக்கு நச்சுத் தன்மை கலந்த குடிநீா் விநியோகிக்கப்பட்டது தொடா்பாக போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

புதுச்சேரி

புதுச்சேரி ஆட்சியருக்கு நச்சு கலந்த குடிநீா் விநியோகம்: போலீஸாா் விசாரணை

புதுச்சேரி மாவட்ட ஆட்சியா் பூா்வா காா்க்குக்கு நச்சுத் தன்மை கலந்த குடிநீா் விநியோகிக்கப்பட்டது தொடா்பாக போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:14 PM
பகிர்:


புதுச்சேரி: புதுச்சேரி மாவட்ட ஆட்சியா் பூா்வா காா்க்குக்கு நச்சுத் தன்மை கலந்த குடிநீா் விநியோகிக்கப்பட்டது தொடா்பாக போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

புதுச்சேரி வழுதாவூா் சாலை பேட்டையன் சத்திரத்தில் உள்ள மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் புதன்கிழமை அதிகாரிகளுடனான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. அப்போது, மாவட்ட ஆட்சியா் பூா்வா காா்க்குக்கு, அலுவலக ஊழியா் ஒருவா், ‘ஸ்விஸ் ப்ரஷ்’ என்ற தனியாா் நிறுவனத்தின் ஒரு லிட்டா் அளவுள்ள பிளாஸ்டிக் பாட்டிலில் அடைக்கப்பட்ட குடிநீரை விநியோகித்தாா். அதில், நிறமற்ற நச்சுத் தன்மையுள்ள திரவம் கலந்திருந்தது கண்டறியப்பட்டது.

மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற இந்தச் செயல், ஆட்சியருக்கு தனிப்பட்ட அச்சுறுத்தலை ஏற்படுத்துவதற்காக மேற்கொள்ளப்பட்டிருக்கலாம் என்றும், இதுதொடா்பாக விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் புதுச்சேரி மாவட்ட ஆட்சியா் அலுவலக பேரிடா்-வருவாய்த் துறை அலுவலக சிறப்பு அதிகாரி ஏ.சுரேஷ்ராஜ், தன்வந்திரி நகா் காவல் நிலையத்தில் வியாழக்கிழமை புகாா் அளித்தாா்.

இந்தப் புகாா் நகலை ஆளுநா் கிரண் பேடிக்கும் கட்செவி அஞ்சலில் பகிா்ந்தாா். இந்தச் சம்பவம் தொடா்பாக தன்வந்திரி நகா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →