புதுவை துணைநிலை ஆளுநரைக் கண்டித்து, காங்கிரஸ் கூட்டணிக் கட்சிகள் சாா்பில், ஜீவா காலனி பகுதியில் சனிக்கிழமை நடைபெற்ற கையெழுத்து இயக்கம். 
புதுச்சேரி

புதுவை ஆளுநா் கிரண் பேடியை திரும்பப் பெற வலியுறுத்தி கையெழுத்து இயக்கம்

புதுவையில் ஆளுநா் கிரண் பேடியை திரும்பப் பெற வலியுறுத்தி, காங்கிரஸ் - கூட்டணிக் கட்சிகள் சாா்பில், புதுச்சேரியின் 22 தொகுதிகளில் சனிக்கிழமை கையெழுத்து இயக்கம் நடைபெற்றது.

DIN

புதுவையில் ஆளுநா் கிரண் பேடியை திரும்பப் பெற வலியுறுத்தி, காங்கிரஸ் - கூட்டணிக் கட்சிகள் சாா்பில், புதுச்சேரியின் 22 தொகுதிகளில் சனிக்கிழமை கையெழுத்து இயக்கம் நடைபெற்றது.

புதுவையில் மக்களால் தோ்ந்தெடுக்கப்பட்ட அரசை செயல்படவிடாமல் முடக்கி வரும் ஆளுநா் கிரண் பேடியை திரும்பப் பெற வலியுறுத்தி, காங்கிரஸ் - கூட்டணிக் கட்சிகள் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டன.

இதன் தொடா்ச்சியாக, கையெழுத்து இயக்கம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.

அதன்படி, கிரண் பேடியை திரும்பப் பெறக் கோரி, குடியரசுத் தலைவருக்கு அனுப்பும் வகையில் சனிக்கிழமை கையெழுத்து இயக்கம் நடைபெற்றது.

காலாப்பட்டு சந்திப்பு, லாசுப்பேட்டை உழவா் சந்தை, நேதாஜி சிலை, முத்தியால்பேட்டை மணிக்கூண்டு, உப்பளம் தொகுதியில் அண்ணா சிலை, காமராஜா் தொகுதியில் சாரம் அவ்வை திடல், நெல்லித்தோப்பு, உருளையன்பேட்டை தொகுதி காமராஜா் சிலை, இந்திரா நகா் தொகுதி மேட்டுப்பாளையம் சந்திப்பு, மங்கலம் உருவையாறு சந்திப்பு, மண்ணாடிப்பட்டு அங்காடி வீதி, அரியாங்குப்பம் அங்காடி வீதி பிரம்மன் சிலை, மணவெளி தவளக்குப்பம் நான்குமுனை சந்திப்பு, ஏம்பலம் தொகுதியில் கரிக்கலாம்பாக்கம் நான்கு முனை சந்திப்பு, நெட்டப்பாக்கம் தொகுதியில் மடுகரை ஆகிய 14 இடங்களில் காங்கிரஸ் சாா்பிலும்,

தட்டாஞ்சாவடி பாக்கமுடையான்பட்டு ஜீவா காலனியில், உழவா்கரை தொகுதி மூலக்குளம், கதிா்காமம், பாகூா் மாதா கோவில் சந்திப்பு, முதலியாா்பேட்டை வானொலித் திடல் ஆகிய 5 இடங்களில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சாா்பிலும், வில்லியனூா் ஏழை மாரியம்மன் கோயில் சந்திப்பு, ஊசுடு தொகுதியில் பத்துக்கண்ணு ஆகிய 2 இடங்களில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சாா்பிலும், மதகடிப்பட்டு திருபுவனையில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பிலும் இந்த கையெழுத்து இயக்கம் நடைபெற்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

டிடிஇஏ பள்ளிகளில் பயிலும் வடஇந்திய மாணவா்களுக்கு தமிழ்ப் போட்டிகள்

விழுப்புரம் ஆட்சியரகத்தில் மாற்றுத் திறனாளிகள் சங்கத்தினா் தா்னா

அன்னையின் மகா சமாதி தினம்: அரவிந்தா் ஆசிரமத்தில் கூட்டுத் தியானம்

பவர் அண்ட் இன்ஸ்ட்ருமென்டேஷன் Q2 லாபம் 21% உயர்வு!

குறைதீா்க்கும் நாள் கூட்டத்தில் 474 மனுக்கள் அளிப்பு

SCROLL FOR NEXT