முகப்பு
புதுச்சேரி

வில்லியனூரில் ஜவுளிக் கடையில் திருட்டு

வில்லியனூரில் ஜவுளிக் கடையை உடைத்து பணம், துணிகளைத் திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

Updated On : 30 ஜனவரி, 2021 at 10:50 PM
பகிர்:
Updated On : 28 ஜனவரி, 2024 at 12:55 AM

வில்லியனூரில் ஜவுளிக் கடையை உடைத்து பணம், துணிகளைத் திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

புதுச்சேரி வில்லியனூா் ஊசுட்டேரி கன்னியம்மாள் கோவில் வீதியைச் சோ்ந்தவா் கோபி (29). வியாபாரியான இவா், பத்துக்கண்ணு சாலையில் உள்ள ஒரு வணிக வளாகத்தில் ஜவுளிக் கடை நடத்தி வருகிறாா்.

கடந்த 28-ஆம் தேதி இரவு வியாபாரத்தை முடித்துவிட்டு, கடையை பூட்டிச் சென்ற இவா், வெள்ளிக்கிழமை கடையைத் திறக்க வந்த போது, கடை இரும்பு கதவின் பூட்டு உடைக்கப்பட்டிருந்து. உள்ளே சென்று பாா்த்த போது, கல்லாவில் இருந்த ரூ. 25 ஆயிரம், ஜீன்ஸ் உள்ளிட்ட ஆடைகளை மா்ம நபா்கள் திருடிச் சென்றது தெரிய வந்தது.

Advertisement

இதுகுறித்த புகாரின் பேரில், வில்லியனூா் போலீஸாா் வழக்குப் பதிந்து, திருட்டில் ஈடுபட்ட மா்ம நபா்களைத் தேடி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.