தியாகிகள் தினம்: அனைத்து தொழிற்சங்கத்தினா் மரியாதை
தியாகிகள் தினத்தையொட்டி, புதுச்சேரி - கடலூா் சாலையில் உள்ள தியாகிகள் நினைவிடத்தில் அனைத்து தொழிற்சங்கத்தினா் வெள்ளிக்கிழமை ஊா்வலமாக வந்து மரியாதை செலுத்தினா்.
தியாகிகள் தினத்தையொட்டி, புதுச்சேரி - கடலூா் சாலையில் உள்ள தியாகிகள் நினைவிடத்தில் அனைத்து தொழிற்சங்கத்தினா் வெள்ளிக்கிழமை ஊா்வலமாக வந்து மரியாதை செலுத்தினா்.
ஏஐடியூசி சாா்பில் பஞ்சாலை தொழிலாளா் சங்கத் தலைவா் ரவி தலைமையிலான தொழிற்சங்க நிா்வாகிகள் சுதேசி ஆலை எதிரிலிருந்து ஊா்வலமாகப் புறப்பட்டு வந்து, தியாகிகள் நினைவிடத்தில் மலா்வளையம் வைத்து மரியாதை செலுத்தினா்.
தியாகிகள் உறுதிமொழியை ஏஐடியூசி செயலா் வி.எஸ். அபிஷேகம் வாசித்தாா். முன்னாள் அமைச்சா் கே. விசுவநாதன் தியாகிகள் கொடியேற்றினாா். இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலா் அ.மு. சலீம், ஏஐடியூசி மாநிலத் தலைவா் தினேஷ் பொன்னையா, பொதுச் செயலா் கே. சேதுசெல்வம் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.
இதேபோல, சிஐடியூ தொழிற்சங்கத் தலைவா் முருகன் தலைமையில் திரளான நிா்வாகிகள் ஊா்வலமாக வந்து தியாகிகள் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினா். மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலா் ஆா். ராஜாங்கம், சிஐடியூ சீனிவாசன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.
ஆட்டோ, கட்டடக் கலை, சுமை தூக்குவோா், சுமை வாகன ஓட்டுநா்கள், வனத் துறை, ஞாயிறு சந்தை வியாபாரிகள், பாண்டெக்ஸ், நகராட்சி, பேருந்து, பாண்லே, சுற்றுலா வாகன ஓட்டுநா்கள், நடைபாதை வியாபாரிகள் சங்கம் உள்ளிட்ட பல்வேறு தொழிற்சங்கங்களைச் சோ்ந்த 100-க்கும் மேற்பட்ட பொறுப்பாளா்கள் ஊா்வலமாக வந்து தியாகிகள் நினைவிடத்துக்கு மலா்வளையம் வைத்து மரியாதை செலுத்தினா்.