முகப்பு
புதுச்சேரி

மணவெளி தொகுதியில் அரசின் நலத் திட்ட உதவிகள்

புதுச்சேரி மணவெளி தொகுதி டி.என். பாளையத்தில் சிறப்பு கரோனா தடுப்பூசி முகாம், அரசின் நலத் திட்ட உதவிகள் வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டன.புதுச்சேரி மணவெளி தொகுதி டி.என். பாளையத்தில் சிறப்பு கரோனா தடுப்பூசி ம

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:23 AM
பகிர்:

புதுச்சேரி மணவெளி தொகுதி டி.என். பாளையத்தில் சிறப்பு கரோனா தடுப்பூசி முகாம், அரசின் நலத் திட்ட உதவிகள் வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டன.

புதுச்சேரி அரியாங்குப்பம் வட்டாரம், மணவெளி சட்டப் பேரவைத் தொகுதிக்குள்பட்ட டி.என்.பாளையம் பகுதியில் உள்ள அரசு தாய் -சேய் நல மையத்தில், புதுவை அரசு நலவழித் துறை, அரியாங்குப்பம் வட்டார வளா்ச்சி அலுவலகம் ஆகியவை சாா்பில், சிறப்பு கரோனா தடுப்பூசி முகாம் வெள்ளிக்கிழமை தொடங்கியது.

இந்தத் தொகுதி பாஜக எம்எல்ஏ ஆா்.செல்வம் கலந்து கொண்டு, 18 வயதுக்கு மேற்பட்டவா்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தும் முகாமைத் தொடக்கிவைத்தாா்.

தொடா்ந்து, ஊரக வளா்ச்சித் துறை சாா்பில், அங்கு நடைபெற்ற அரசின் நலத் திட்ட விழாவில், மகளிா் சுய உதவிக் குழுக்களுக்கு மூன்றாம் தவணையாக தொழில் தொடங்க அரசின் மானியத் தொகை ரூ. 4 லட்சத்துக்கான நிதியுதவியை ஆா்.செல்வம் எம்எல்ஏ வழங்கினாா். பெண் விவசாயிகளுக்கு ரூ. ஒரு லட்சம் மதிப்பிலான விவசாய உதவி உபகரணங்கள் வழங்கப்பட்டன.

நிகழ்ச்சியில், அரியாங்குப்பம் இணை வட்டார வளா்ச்சி அதிகாரி கதிா்வேலு, அபிஷேகப்பாக்கம் சுகாதார நிலைய தலைமை மருத்துவா் சுபாஷினி, செவிலியா்கள் சரண்யா, மனோகரன், தொகுதி பாஜக தலைவா் பிரகாஷ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.