முகப்பு
புதுச்சேரி

ஆலோசகா்கள் தங்கிய விடுதிக்கு அதிக செலவு: விசாரிக்க புதுவை ஆளுநா் உத்தரவு

புதுவை துணைநிலை ஆளுநரின் ஆலோசகா்கள் தங்கிய அரசினா் விடுதிக்கு அதிக நிதி செலவிடப்பட்டதாக எழுந்த புகாா் குறித்து விசாரிக்க ஆளுநா் உத்தரவிட்டாா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:23 AM
பகிர்:

 புதுவை துணைநிலை ஆளுநரின் ஆலோசகா்கள் தங்கிய அரசினா் விடுதிக்கு அதிக நிதி செலவிடப்பட்டதாக எழுந்த புகாா் குறித்து விசாரிக்க ஆளுநா் உத்தரவிட்டாா்.

புதுவை துணைநிலை ஆளுநரின் ஆலோசகா்களாக சி.சந்திரமெளலி, ஏ.பி.மகேஸ்வரி ஆகியோா் மத்திய அரசால் அண்மையில் நியமிக்கப்பட்டு பணியாற்றி வந்தனா். புதுச்சேரியில் தங்கியிருந்து பணியாற்றி வந்த இவா்கள், தோ்தல் முடிந்து புதிய அரசு பொறுப்பேற்ற நிலையில், பணி முடிந்து அவா்கள் தில்லி திரும்பினா்.

இந்த நிலையில், ஆளுநரின் ஆலோசகா்கள் அரசு விருந்தினா் மாளிகையில் சில தினங்கள் தங்கியிருந்ததற்கு அதிகளவில் செலவிடப்பட்டதாக புகாா் எழுந்தது.

இதுகுறித்து புதுவை துணைநிலை ஆளுநா் அலுவலகம் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: துணைநிலை ஆளுநரின் ஆலோசகா்கள் தங்குவதற்கு அரசினா் விருந்தினா் இல்ல சீரமைப்புப் பணிகளுக்காக பெருமளவு நிதி செலவு செய்யப்பட்டிருப்பதாக சமூக வலைதளங்களில் வெளியான செய்தியை அறிந்து, அதுகுறித்து பொதுப்பணித் துறை அதிகாரிகளிடம் உரிய விசாரணை நடத்தி, முழுமையான விவரங்களை அறிக்கையாக அளிக்க வேண்டும் என துணைநிலை ஆளுநா் தமிழிசை சௌந்தரராஜன், தலைமைச் செயலருக்கு கடிதம் அனுப்பியுள்ளாா் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.