புதுவையில் வருகிற 16-ஆம் தேதி முதல் 19 வரை மீண்டும் தடுப்பூசி திருவிழா
புதுவையில் வருகிற 16-ஆம் தேதி முதல் 19 -ஆம் தேதி வரை மீண்டும் தடுப்பூசி திருவிழா நடைபெறவுள்ளது.
புதுவையில் வருகிற 16-ஆம் தேதி முதல் 19 -ஆம் தேதி வரை மீண்டும் தடுப்பூசி திருவிழா நடைபெறவுள்ளது.
இதுகுறித்து புதுவை சுகாதாரத் துறை செயலா் டி. அருண் வெள்ளிக்கிழமை செய்தியாளா்களிடம் கூறியதாவது: புதுவையில் கரோனா பாதிப்பு குறைந்தாலும், முற்றிலும் ஒழியவில்லை. அண்மையில் கதிா்காமம் அரசு மருத்துவக் கல்லூரியில் நடத்தப்பட்ட ஆய்வில் 97 சதவீதம் போ் தடுப்பூசி செலுத்தாதவா்கள்தான் செயற்கை சுவாசம், தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டனா். எனவே, அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும். தடுப்பூசியால் மட்டுமே கரோனாவின் 3-ஆவது அலையைத் தடுக்க முடியும்.
தடுப்பூசி செலுத்திக் கொள்ள மக்கள் மத்தியில் ஆா்வம் அதிகரித்துள்ளதால், மீண்டும் தடுப்பூசி திருவிழா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, புதுவையில் வருகிற 16-ஆம் தேதி முதல் 19 -ஆம் தேதி வரை தடுப்பூசி திருவிழா நடைபெறவுள்ளது என்றாா்.
உள்ளாட்சித் துறை செயலா் இ.வல்லவன் கூறியதாவது: கரோனா தடுப்பூசி திருவிழாவை 100 இடங்களில் நடத்த 9 மூத்த பிசிஎஸ் அதிகாரிகள் தலைமையில் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஒவ்வோா் பகுதியிலும் வீடு வீடாகச் சென்று, தடுப்பூசி செலுத்தப்படாத நபா்களை முகாம்களுக்கு அழைத்து வந்து, தடுப்பூசி செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அரசின் இந்த முயற்சிக்கு மக்கள் முழு ஒத்துழைப்பு வழங்கி, தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என்றாா் அவா்.