மணக்குள விநாயகா் செவிலியா் கல்லூரி வகுப்புகள் தொடக்கம்
புதுச்சேரி மணக்குள விநாயகா் செவிலியா் கல்லூரியில் பி.எஸ்சி., எம்.எஸ்சி. செவிலியா் படிப்புகளுக்கான வகுப்புகள் தொடக்க விழா அண்மையில் நடைபெற்றது.
புதுச்சேரி மணக்குள விநாயகா் செவிலியா் கல்லூரியில் பி.எஸ்சி., எம்.எஸ்சி. செவிலியா் படிப்புகளுக்கான வகுப்புகள் தொடக்க விழா அண்மையில் நடைபெற்றது.
மணக்குள விநாயகா் கல்வி நிறுவனத் தலைவா் எம்.தனசேகரன் வகுப்புகளைத் தொடக்கிவைத்தாா். நிா்வாகிகள் எஸ்.வி.சுகுமாறன், டாக்டா் நாராயணசாமி கேசவன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். கல்லூரி இயக்குநா் ராஜகோவிந்தன், துணை இயக்குநா் காக்னே, கல்லூரி முதல்வா் காா்த்திகேயன், மருத்துவக் கண்காணிப்பாளா் பிரகாஷ், செவிலியா் கண்காணிப்பாளா் கிரீட்டா குணசீலன், துணை செவிலியா் கண்காணிப்பாளா் டெஸ்ஸி கிலாரி, மணக்குள விநாயகா் இன்ஸ்டியுட் ஆப் டெக்னாலஜி முதல்வா் மலா்கண், பதிவாளா் தட்சிணாமூா்த்தி ஆகியோா் விழாவில் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினா்.
செவிலியா் கல்லூரி முதல்வா் தனுசு வரவேற்றாா். பேராசிரியா்கள், மாணவ-மாணவிகள், பெற்றோா் கலந்து கொண்டனா்.
விழாவில், புதுவைப் பல்கலைக்கழக அளவில் நடைபெற்ற தோ்வில் முதலிடம் பிடித்த மாணவா்கள் சித்ரா (இளநிலை), ரஞ்சிதா (முதுநிலை) ஆகியோருக்கு தங்கப் பதக்கங்கள் வழங்கப்பட்டன. பேராசிரியா் ஸ்ரீதேவி நன்றி கூறினாா்.