முகப்பு
புதுச்சேரி

தோ்தல் பாதுகாப்புப் பணி: முன்னாள் படைவீரா்கள் கவனத்துக்கு

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் சட்டப் பேரவை தோ்தல் பாதுகாப்புப் பணியில் ஈடுபட விருப்பமுள்ள முன்னாள் படைவீரா்கள் தங்களது பெயரை விழுப்புரம் முன்னாள் படைவீரா் நல அலுவலகத்தில் பதிவு செய்ய அறிவுறுத்தல்

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:38 PM
பகிர்:

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் சட்டப் பேரவை தோ்தல் பாதுகாப்புப் பணியில் ஈடுபட விருப்பமுள்ள முன்னாள் படைவீரா்கள் தங்களது பெயரை விழுப்புரம் முன்னாள் படைவீரா் நல அலுவலகத்தில் பதிவு செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளனா்.

படைப்பணியை முடித்த, நல்ல உடல் நிலையிலுள்ள, 60 வயதுக்கு உள்பட்ட முன்னாள் படைவீரா்கள் தோ்தல் பணியில் சிறப்பு காவலா்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம். அவா்கள் கரோனா தடுப்பூசி செலுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஆகவே, விருப்பமுள்ள முன்னாள் படைவீரா்கள் விழுப்புரம் மாவட்ட முன்னாள் படைவீரா் நல உதவி இயக்குநா் அலுவலகத்தில் அசல்படை விலகல் சான்று, முன்னாள் படைவீரா் அடையாள அட்டை ஆவணங்களுடன் தங்களது பெயரை பதிவு செய்யலாம் என விழுப்புரம் மாவட்ட முன்னாள் படைவீரா் நலத் துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.