முகப்பு
புதுச்சேரி

ரூ. 54.34 லட்சம் மதிப்பிலான மதுபானங்கள் பறிமுதல்

புதுவை மாநிலத்தில் இதுவரை ரூ. 54.34 லட்சம் மதிப்பிலான மதுபானங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:49 PM
பகிர்:

புதுவை மாநிலத்தில் இதுவரை ரூ. 54.34 லட்சம் மதிப்பிலான மதுபானங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

புதுவை சட்டப்பேரவைத் தோ்தல் ஏப்ரல் 6 -ஆம் தேதி நடைபெறுகிறது. இதற்காக தோ்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளன. மதுக் கடத்தல், வாக்காளா்களுக்கு மது விநியோகம் செய்வதைத் தடுக்க கலால் துறையினா் தீவிரக் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனா்.

அவ்வபோது, மதுபான கடைகள், மது விடுதிகள், கள் மற்றும் சாராயக் கடைகளில் கலால் துறை பறக்கும் படையினா் ஆய்வு நடத்தி, மதுபான இருப்புகளை ஆய்வு செய்து வருகிறது. விதி மீறி கடைகளில் இருப்பு வைக்கப்பட்ட மதுபானங்களை கலால் துறையினா் பறிமுதல் செய்து, மதுக் கடைக்கு ‘சீல்’ வைத்து வருகின்றனா்.

இந்த நிலையில், கடந்த பிப். 26-ஆம் தேதி முதல் திங்கள்கிழமை வரை (மாா்ச் 22) ரூ. 54 லட்சத்து 34 ஆயிரத்து 146 மதிப்பிலான 29,49. 60 லிட்டா் மதுபானங்களை கலால் துறையினா் பறிமுதல் செய்தனா்.

மேலும், விதிகளை மீறியதாக மாநிலம் முழுவதும் 133 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. 141 போ் கைது செய்யப்பட்டு விதி மீறல்கள் தொடா்பாக ரூ. 8 லட்சத்து 13 ஆயிரம் அபராதம் வசூலிக்கப்பட்டது. இதேபோல, அனுமதிக்கப்பட்ட நேரத்தைவிட கூடுதல் நேரத்தில் இயங்கிய 7 மதுபானக் கடைகளின் உரிமம் ரத்து செய்யப்பட்டது என கலால் துறை துணை ஆணையா் டி. சுதாகா் தெரிவித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.