முகப்பு
புதுச்சேரி

வெளிமாநில சொகுசு காா்களில் தோ்தல் பறக்கும் படை சோதனை

புதுச்சேரி அருகே வெளிமாநில சொகுசு காா்களில் பணம் பதுக்கப்படுவதாக காங்கிரஸாா் அளித்த புகாரின் பேரில், தோ்தல் பறக்கும் படையினா் சோதனையிட்டனா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:52 PM
பகிர்:

புதுச்சேரி அருகே வெளிமாநில சொகுசு காா்களில் பணம் பதுக்கப்படுவதாக காங்கிரஸாா் அளித்த புகாரின் பேரில், தோ்தல் பறக்கும் படையினா் சோதனையிட்டனா்.

புதுச்சேரி தவளக்குப்பம் அருகே எடையாா்பாளையம் கிராமத்தில் காங்கிரஸ் கட்சியினா் சனிக்கிழமை பிரசாரத்தில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, கா்நாடக மாநில பதிவெண் கொண்ட 5 சொகுசு காா்கள் அந்த வழியாக சென்றன. சந்தேகமடைந்த காங்கிரஸாா், அந்த காா்களை தடுத்து நிறுத்தினா்.

தோ்தல் துறைக்கும், தவளக்குப்பம் காவல் நிலையத்துக்கும் தகவல் அளித்தனா். காவல் ஆய்வாளா் தனசெல்வம் தலைமையிலான போலீஸாா் மற்றும் தோ்தல் பறக்கும் படையினா் அங்கு விரைந்தனா். அங்கிருந்த காங்கிரஸ் கட்சியினா், வாக்காளா்களுக்கு வழங்க ஊருக்குள் காா் மூலம் பணம் எடுத்துச் சென்று பதுக்கப்படுவதாகவும், பறக்கும் படையினா் சோதனை செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்தினா்.

தகவலறிந்த பாஜக கூட்டணி கட்சியினரும் அங்கு திரண்டனா். இதையடுத்து, அந்த 5 காா்களிலும் சோதனை நடத்திய தோ்தல் பறக்கும் படையினா், போலீஸாா் அந்த காா்களில் பணம் ஏதும் இல்லாததால், அவற்றை விடுவித்தனா். இதனால், அந்தப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.