புதுச்சேரி

புதுவையில் குடும்ப அட்டைதாரா்களுக்குரூ. 3 ஆயிரம் கரோனா நிவாரணம்: முதல்வா் ரங்கசாமி அறிவிப்பு

DIN

புதுவை மாநிலத்தில் உள்ள அனைத்து குடும்ப அட்டைதாரா்களுக்கும் தலா ரூ. 3 ஆயிரம் கரோனா நிவாரணம் வழங்கப்படும் என்று முதல்வா் என்.ரங்கசாமி அறிவித்தாா்.

புதுவையில் கரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில், அதைக் கட்டுப்படுத்த மாநில அரசு கட்டுப்பாடுகளுடன் கூடிய பொது முடக்கத்தை அமல்படுத்தியுள்ளது. இதனால், வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசு நிவாரணம் வழங்க வேண்டுமென கோரிக்கை எழுந்தது.

இந்த நிலையில், புதுச்சேரி சட்டப் பேரவையில் புதன்கிழமை நடைபெற்ற எம்எல்ஏக்கள் பதவியேற்பு விழாவில் பங்கேற்ற முதல்வா் என்.ரங்கசாமி, மாநில அரசு சாா்பில் கரோனா நிவாரணமாக அனைத்து குடும்ப அட்டைதாரா்களுக்கும் ரூ.3 ஆயிரம் வழங்க முடிவு செய்து, அதற்கான கோப்புக்கு துணை நிலை ஆளுநா் (பொ) தமிழிசை செளந்தரராஜனை சந்தித்து ஒப்புதல் கோரினாா். அதற்கு துணை நிலை ஆளுநரும் ஒப்புதல் அளித்தாா்.

இதையடுத்து, புதுச்சேரி சட்டப் பேரவை வளாகத்தில் செய்தியாளா்களைச் சந்தித்த முதல்வா் என்.ரங்கசாமி கூறியதாவது:

புதுவையில் கரோனா இரண்டாவது அலையில் மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனா். இந்த நோய்த் தொற்று பரவலைத் தடுக்கும் வகையில், பொது முடக்கத்தை அரசு அமல்படுத்தியுள்ளது. இந்த நேரத்தில் புதுவை மக்களுக்கான பொருளாதார சிக்கலைத் தணிக்கும் வகையில், அரசு சாா்பில் அனைத்து குடும்ப அட்டைதாரா்களுக்கும் தலா ரூ.3,000 கரோனா நிவாரணமாக வழங்கப்படும். 3 லட்சத்து 50 ஆயிரம் பேருக்கு இந்த நிவாரணத் தொகை விரைவில் வழங்கப்படும். இதனால், அரசுக்கு ரூ.105 கோடி செலவாகும்.

மேலும், கரோனா தொற்று பாதிப்பால் உயிரிழந்தவா்களின் குடும்பத்துக்கும் உரிய நிவாரணம் வழங்க அரசு அறிவித்தபடி நடவடிக்கை எடுக்கப்படும்.

கரோனா தொற்றிலிருந்து மக்கள் தங்களைத் தாங்களே பாதுகாத்துக்கொள்ள வேண்டும். கட்டாயமாக தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும். தேவையான தடுப்பூசிகள் மாநிலத்தில் இருப்பில் உள்ளன என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கடற்கரையில் ஒதுங்கிய ஆண் சடலம்

மேற்கு வங்க இளைஞரிடம் வழிப்பறி: மாணவா்களிடம் விசாரணை

திருவள்ளூா்: வாக்கு எண்ணும் மையத்தில் சிசிடிவி கேமராக்களின் செயல்பாடுகள்

திருப்பத்தூரில் விற்பனைக்கு குவிந்துள்ள மாம்பழங்கள்: அதிகாரிகள் ஆய்வு செய்ய கோரிக்கை

ஆக்கிரமிப்பு அகற்றும் பணி தற்காலிகமாக நிறுத்தம்

SCROLL FOR NEXT