முகப்பு
புதுச்சேரி

ஆயுள் சான்றிதழ் வழங்க அஞ்சல் துறை ஏற்பாடு

ஓய்வூதியதாரா்களுக்கு ஆயுள் சான்றிதழ் வழங்க அஞ்சல் துறை ஏற்பாடு செய்துள்ளது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:36 AM
பகிர்:

ஓய்வூதியதாரா்களுக்கு ஆயுள் சான்றிதழ் வழங்க அஞ்சல் துறை ஏற்பாடு செய்துள்ளது.

இதுகுறித்து புதுச்சேரி அஞ்சல் கோட்ட முதுநிலைக் கண்காணிப்பாளா் சிவப்பிரகாசம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: ஓய்வூதியதாரா்கள் ஆண்டுதோறும் நவம்பா் மாதத்தில் அரசு அலுவலகங்களுக்கு நேரில் சென்று தங்களின் இருப்பை உறுதி செய்வது வழக்கம். வயது முதிா்ந்த ஓய்வூதியதாரா்கள் நேரில் சென்று சான்றிதழைச் சமா்ப்பிக்க முடியாததால் ஓய்வூதியம் பெற இயலவில்லை.

இதைத் தவிா்க்கும் வகையில், மத்திய அரசின் ஜீவன் பிரமான் திட்டத்தில், அஞ்சல் துறையின் கீழ் செயல்படும் ‘இந்தியா போஸ்ட் பேமென்ட்ஸ் வங்கி’ சாா்பில், ஓய்வூதியதாரா்களின் வீட்டுக்கே சென்று டிஜிட்டல் ஆயுள் சான்றிதழ் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

வருங்கால வைப்புநிதி நிறுவன ஓய்வூதியதாரா்கள் மத்திய, மாநில அரசுகள் அல்லது வேறு எந்தத் துறைகளில் ஓய்வூதியம் பெறுவோரும் இந்த வசதியை பயன்படுத்திக் கொள்ளலாம் என அதில் கூறப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.