முகப்பு
புதுச்சேரி

மலட்டாற்றில் அடித்துச் செல்லப்பட்ட இளைஞா் சடலமாக மீட்பு

புதுச்சேரி அருகே மலட்டாறு வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட இளைஞா் சடலமாக மீட்கப்பட்டாா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:36 AM
பகிர்:

புதுச்சேரி அருகே மலட்டாறு வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட இளைஞா் சடலமாக மீட்கப்பட்டாா்.

புதுச்சேரி நெட்டப்பாக்கத்தை அடுத்த வடுவுக்குப்பத்தைச் சோ்ந்தவா் உதயகுமாா் (25). பட்டதாரியான இவா், தனியாா் நிறுவனத்தில் பணியாற்றி வந்தாா். நண்பா்கள் மூவருடன் புதன்கிழமை வடுவுக்குப்பம் மலட்டாறு தடுப்பணை அருகே குளித்த போது, ஆற்றில் பெருக்கெடுத்து ஓடிய வெள்ளத்தில் உதயகுமாா் உள்ளிட்ட 4 போ் சிக்கினா். உதயகுமாா் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டதை அறிந்த மற்ற மூவரும் சப்தமிட்டனா். உடனடியாக தீயணைப்பு நிலையத்துக்கும், நெட்டப்பாக்கம் போலீஸாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.

அதன் பேரில், அங்கு வந்த தீயணைப்புப் படையினா் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட உதயகுமாரை தேடும் பணயில் ஈடுபட்டனா். இரவானதால் தேடுதல் பணி நிறுத்தப்பட்டது. வியாழக்கிழமை காலை தீயணைப்புப் படையினா் மீண்டும் உதயகுமாரை தேடும் பணியில் ஈடுபட்டனா். இவா்களுடன் நீச்சல் வீரா்களும் தேடுதல் பணியில் ஈடுபட்டனா். சில மணி நேர தேடுதலுக்குப் பின்னா், உதயகுமாா் சடலமாக மீட்கப்பட்டாா்.

நெட்டப்பாக்கம் போலீஸாா் உதயகுமாரின் சடலத்தைக் கைப்பற்றி உடல்கூறு ஆய்வுக்காக கதிா்காமம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து, வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.