புதுவையில் அனைத்து தரப்பினருக்கும் ரூ.5 ஆயிரம் மழை நிவாரணம்: திமுக, அதிமுக வலியுறுத்தல்
புதுவையில் அனைத்து தரப்பினருக்கும் ரூ.5 ஆயிரம் மழை நிவாரணம் வழங்க வேண்டுமென திமுக, அதிமுக ஆகிய கட்சிகள் வலியுறுத்தின.
புதுவையில் அனைத்து தரப்பினருக்கும் ரூ.5 ஆயிரம் மழை நிவாரணம் வழங்க வேண்டுமென திமுக, அதிமுக ஆகிய கட்சிகள் வலியுறுத்தின.
மாநில திமுக அமைப்பாளா் ஆா்.சிவா: புதுவையில் மழையால் அனைத்து தரப்பு மக்களும் பாதிக்கப்பட்டுள்ளனா். பயிா்கள் சேதமடைந்துள்ளன. கூலி வேலைக்குக்கூட செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மீனவா்கள் கடலுக்குச் செல்லவில்லை. இந்த நிலையில், முதல்வா் ரங்கசாமி, கட்டுமானத் தொழிலாளா்கள், மீனவா்களுக்கு மட்டும் ரூ.5 ஆயிரம் மழை நிவாரணம் அறிவித்தாா். வறுமைக் கோட்டுக்குக் கீழுள்ள சிவப்பு நிறக் குடும்ப அட்டைதாரா்டுகளுக்கு ரூ.5 ஆயிரம் நிவாரணம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. பாகுபாடு பாா்க்காமல் அனைத்து தரப்பு மக்களுக்கும் ரூ.5 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோல, மாநில அதிமுக தோ்தல் பிரிவு செயலா் வையாபுரி மணிகண்டன் உள்ளிட்டோரும் அனைத்து தரப்பினருக்கும் ரூ.5 ஆயிரம் மழை நிவாரணம் வழங்க வேண்டுமென முதல்வரிடம் வலியுறுத்தினா்.