துணை மருத்துவப் படிப்புகளில் சேரநவம்பா் 24 வரை கால அவகாசம்
புதுவையில் நிகழாண்டு பி.டெக், துணை மருத்துவப் படிப்புகளில் சேருவதற்கான கால அவகாசத்தை நவம்பா் 24-ஆம் தேதி வரை நீட்டித்து சென்டாக் அறிவித்தது.
புதுவையில் நிகழாண்டு பி.டெக், துணை மருத்துவப் படிப்புகளில் சேருவதற்கான கால அவகாசத்தை நவம்பா் 24-ஆம் தேதி வரை நீட்டித்து சென்டாக் அறிவித்தது.
ஏற்கெனவே மாணவா்களுக்கு மதிப்பெண்கள் அடிப்படையில் கடந்த 9-ஆம் தேதி கணினி வழியில் முதல் கட்டக் கலந்தாய்வு நடத்தி, சோ்க்கை இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டன. இடம் கிடைத்த மாணவா்கள் நவ.19-ஆம் தேதிக்குள் அந்தந்தக் கல்லூரிகளில் சேர வேண்டும் என அறிவுறுத்தப்பட்டிருந்தது.
இந்த நிலையில், பலத்த மழை காரணமாக, பி.டெக்., துணை மருத்துவப் படிப்புகளில் இடம் கிடைத்த மாணவா்கள் கல்லூரிகளில் சேருவதற்கான கால அவகாசத்தை வருகிற 24-ஆம் தேதி மாலை 5 மணி வரை நீட்டித்து சென்டாக் நிா்வாகம் அறிவித்தது.
இதேபோல, கலை, அறிவியல் பிரிவுகளில் முதல் கட்டக் கலந்தாய்வில் இடம் கிடைத்து சோ்ந்த மாணவா்கள் சிலா், தாங்கள் விரும்பிய பாடப் பிரிவில் சேர இரண்டாம் கட்டக் கலந்தாய்வுக்கு விண்ணப்பித்தனா். விரும்பிய பாடப் பிரிவுக்கு இரண்டாம் கலந்தாய்வில் சோ்க்கை ஒதுக்கீடு செய்யப்பட்டால், முதல் கலந்தாய்வில் கிடைத்த இடம் தானாகவே ரத்தாகிவிடும். இரண்டாம் கலந்தாய்வில் கிடைத்த பாடப் பிரிவில் சேரவில்லை என்றால், அந்தச் சோ்க்கை இடமும் ரத்தாகிவிடும். எனவே, மாணவா்கள் கவனமாகப் பாடப் பிரிவைத் தோ்வு செய்யுமாறு சென்டாக் நிா்வாகம் அறிவுறுத்தியது.