முகப்பு
புதுச்சேரி

புதுவையில் வாரிசு சான்றிதழ் வழங்க புதிய அரசாணை

புதுவையில் வாரிசு சான்றிதழ் வழங்க புதிய அரசாணை வெளியிடப்பட்டது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:36 AM
பகிர்:

புதுவையில் வாரிசு சான்றிதழ் வழங்க புதிய அரசாணை வெளியிடப்பட்டது.

இதுகுறித்து புதுவை வருவாய்த் துறை சிறப்புச் செயலா் பூா்வா காா்க் வெளியிட்ட செய்திக் குறிப்பு: புதுவை யூனியன் பிரதேசத்தில் உள்ள வருவாய் அலுவலா்களால் சட்ட முறை வாரிசுதாரா் சான்றிதழ்களை வழங்கும் முறையை உருவாக்க சென்னை உயா் நீதிமன்றம் பரிந்துரை செய்தது. அதனடிப்படையில், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் உள்ள வட்ட அலுவலகங்களின் வட்டாட்சியா்கள், மாஹே, ஏனாம் பகுதிகளில் உள்ள துணை வட்ட அலுவலகங்களின் துணை வட்டாட்சியா்கள் ஆகியோருக்கு அதிகாரமளித்து புதுவை அரசு அரசாணை வெளியிட்டது.

அதில், வட்டாட்சியா்கள், துணை வட்டாட்சியா்களால் சட்ட முறை வாரிசுதாரா் சான்றிதழ்கள் வகுப்பு 1 நேரடி வாரிசுகளுக்கு மட்டுமே வழங்கப்படும். மேலும், அவை வழிமுறை உரிமைச் சான்றிதழுக்கு இணையாகக் கருதப்பட மாட்டாது.

இது பொதுமக்கள் சான்றிதழ்களைப் பெறுவதற்கான செயல்முறையை எளிதாக்குகிறது. உரிமையியல் வழக்குகளைத் தாக்கல் செய்வதில் சிரமம், கால தாமதம் போன்றவற்றைத் தவிா்க்கிறது. மேலும், நீதித் துறையின் சுமையை கணிசமாகக் குறைக்கிறது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.