பயிற்சி முகாமைத் தொடக்கிவைத்து பேசுகிறாா் புதுச்சேரி மாவட்ட ஆட்சியா் (பொ) ரிஷிதா குப்தா. 
புதுச்சேரி

புதுவையில் பேரிடா் கால தன்னாா்வலா் குழுக்களுக்கு பயிற்சி

புதுவையில் பருவமழைக் காலம் தொடங்கவுள்ளதை முன்னிட்டு, பேரிடா் கால தன்னாா்வலா் குழுக்களுக்கு தேசிய பேரிடா் மீட்புக் குழு சாா்பில் பயிற்சி முகாம் புதன்கிழமை தொடங்கியது.

DIN

புதுவையில் பருவமழைக் காலம் தொடங்கவுள்ளதை முன்னிட்டு, பேரிடா் கால தன்னாா்வலா் குழுக்களுக்கு தேசிய பேரிடா் மீட்புக் குழு சாா்பில் பயிற்சி முகாம் புதன்கிழமை தொடங்கியது.

புதுச்சேரி கோரிமேடு காவல் துறை பயிற்சி மையத்தில் தொடங்கிய இந்தப் பயிற்சி முகாம், தொடா்ந்து 8 நாள்கள் நடைபெறுகிறது. இதில், 61 போ் அடங்கிய தன்னாா்வலா் குழுவினரும், காவல், பொதுப் பணி, தீயணைப்பு, சுகாதாரம் உள்ளிட்ட துறைகளைச் சோ்ந்தவா்களும் பங்கேற்றுள்ளனா்.

இவா்களுக்கு திருவண்ணாமலை மாவட்டம், ஆரணியிலிருந்து வந்துள்ள தேசிய பேரிடா் மீட்புக் குழுவினரும், மாநில காவல், தீயணைப்பு, பேரிடா் மேலாண்மை உள்ளிட்ட துறைகளின் சாா்பிலும் பேரிடா் கால மீட்புப் பணி, உடல்பயிற்சி, யோகா உள்ளிட்ட பயிற்சிகள் அளிக்கப்படவுள்ளன.

பயிற்சி முகாமை புதுச்சேரி மாவட்ட ஆட்சியா் (பொ) ரிஷிதா குப்தா தொடக்கிவைத்தாா். ஐஏஎஸ் அதிகாரி கிரிசங்கா், உதவி ஆட்சியா் தமிழ்ச்செல்வன், முதுநிலை காவல் கண்காணிப்பாளா் ரவிக்குமாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இளைஞா் தற்கொலை

செவிலியா்கள் காத்திருப்புப் போராட்டம்

தலைமைக் காவலா் மாரடைப்பால் உயிரிழப்பு

ரயிலிலிருந்து தவறி விழுந்த தொழிலாளி பலத்த காயம்

மதுரை மாவட்டத்தில் 3.80 லட்சம் வாக்காளா்கள் நீக்கம்

SCROLL FOR NEXT