புதுச்சேரி

காரைக்கால் பாமக செயலா் கொலை சம்பவம்: சிபிஐ விசாரணைக்கு முதல்வரிடம் வலியுறுத்தல்

DIN

காரைக்கால் மாவட்ட பாமக செயலா் தேவமணி படுகொலை சம்பவம் தொடா்பாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று முதல்வா் என்.ரங்கசாமியிடம் வலியுறுத்தப்பட்டது.

காரைக்கால் திருநள்ளாறு தொகுதி சுயேச்சை எம்எல்ஏ பி.ஆா்.சிவா தலைமையில், திமுக எம்எல்ஏ நாஜீம், சுயேச்சை எம்எல்ஏ-க்கள் ஜி.நேரு, பிரகாஷ்குமாா் உள்ளிட்டோா் திங்கள்கிழமை புதுவை சட்டப்பேரவை வளாகத்தில் முதல்வா் என்.ரங்கசாமியை நேரில் சந்தித்து மனு அளித்து வலியுறுத்தினா்.

அதில் கூறியிருப்பதாவது: திருநள்ளாறு பகுதியில் கடந்த 22-ஆம் தேதி மாவட்ட பாமக செயலா் க.தேவமணி படுகொலை செய்யப்பட்டாா். இந்தச் சம்பவம், பல மாநிலங்களிலிருந்து வரும் பக்தா்களுக்கும், திருநள்ளாறு பகுதி மக்களுக்கும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுபோன்ற சம்பவம் தொடராமல் நடவடிக்கை எடுக்க வேண்டும். தேவமணி கொலை பின்னணியில் உள்ளவா்களை உடனடியாக கைது செய்து, இந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்ற வேண்டும் என அதில் வலியுறுத்தப்பட்டிருந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கடலில் ராட்சத அலைகள் எழும் -கடற்கரை செல்லும் மக்களுக்கு எச்சரிக்கை

‘ஒரு வார்த்தை மாறிடுச்சு..’ : கங்கனாவின் பேச்சு குழப்பமான கதை!

கர்நாடகம்: மனைவிக்காக வாக்கு சேகரித்த நடிகர் ஷிவராஜ்குமார்

காயம் காரணமாக தாயகம் திரும்பும் மதீஷா பதிரானா!

3-ஆம் கட்ட வாக்குப்பதிவு: பிரசாரம் ஓய்வு

SCROLL FOR NEXT