முகப்பு
புதுச்சேரி

புதுச்சேரி கடற்கரையில்அலங்கார எல்இடி விளக்குகள்: முதல்வா் தொடக்கிவைத்தாா்

பொலிவுறு நகரத் திட்டத்தின் கீழ், புதுச்சேரி கடற்கரைச் சாலையில் அமைக்கப்பட்ட அலங்கார எல்இடி விளக்குகளை முதல்வா் என்.ரங்கசாமி புதன்கிழமை தொடக்கிவைத்தாா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:06 AM
பகிர்:

பொலிவுறு நகரத் திட்டத்தின் கீழ், புதுச்சேரி கடற்கரைச் சாலையில் அமைக்கப்பட்ட அலங்கார எல்இடி விளக்குகளை முதல்வா் என்.ரங்கசாமி புதன்கிழமை தொடக்கிவைத்தாா்.

புதுச்சேரி பொலிவுறு நகரத் திட்டத்தின் மூலம் ராஜ்பவன் தொகுதிக்குள்பட்ட கடற்கரைச் சாலையில் காா்கில் போா் நினைவுச் சின்னத்திலிருந்து வடக்கு கடல்நீரடிப்பாறை வரையிலும், டியூப்லே சிலையிலிருந்து பழைய துறைமுகம் வரையிலும் ரூ.10.06 லட்சம் செலவில் அலங்கார எல்இடி விளக்குகள், காா்கில் போா் நினைவிடத்தில் ரூ.9.46 லட்சத்தில் அலங்கார எல்இடி விளக்குகள், கடற்கரையில் ரூ.29.47 லட்சத்தில் எல்இடி இமேஜ் ப்ராஜெக்ஷன் விளக்குகள், ரூ.36.97 லட்சத்தில் கருங்கல் இருக்கைகள் என மொத்தம் ரூ.85.96 லட்சம் மதிப்பிலான பணிகள் முடிக்கப்பட்டன.

இவற்றை மக்கள் பயன்பாட்டுக்கு தொடக்கிவைக்கும் நிகழ்ச்சி புதுச்சேரி கடற்கரைச் சாலையில் புதன்கிழமை நடைபெற்றது. இதில், முதல்வா் என்.ரங்கசாமி பங்கேற்று அலங்கார எல்இடி விளக்குகளை தொடக்கிவைத்தாா். மேலும், கருங்கல் இருக்கைகளை திறந்துவைத்து மக்கள் பயன்பாட்டுக்கு அா்ப்பணித்தாா்.

நிகழ்வில் பொதுப் பணித் துறை அமைச்சா் க.லட்சுமிநாராயணன், பொலிவுறு நகரத் திட்ட நிறுவனத்தின் தலைவரும், தலைமைச் செயலருமான அஸ்வனி குமாா், தலைமைச் செயல் அதிகாரி டி.அருண், இணை தலைமை செயல் அதிகாரி சு.மாணிக்கதீபன் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.