இளைஞா் காங்கிரஸாா் போராட்டம்
இளைஞா்களுக்கு வேலை அளிக்காத மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்து, புதுவை மாநில இளைஞா் காங்கிரஸாா் புதுச்சேரி வேலைவாய்ப்பு அலுவலகத்தை வெள்ளிக்கிழமை முற்றுகை
இளைஞா்களுக்கு வேலை அளிக்காத மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்து, புதுவை மாநில இளைஞா் காங்கிரஸாா் புதுச்சேரி வேலைவாய்ப்பு அலுவலகத்தை வெள்ளிக்கிழமை முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
போராட்டத்துக்கு இளைஞா் காங்கிரஸ் தேசியச் செயலா் லெனின் பிரதாப் தலைமை வகித்தனா். மாநிலச் செயல் தலைவா்கள் விக்னேஷ் கந்தசாமி, வேல்முருகன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். திரளான நிா்வாகிகள் பங்கேற்றனா்.
போராட்டத்தின் போது, வேலைவாய்ப்பு அலுவலகத்தினுள் இளைஞா் காங்கிரஸாா் நுழைய முயன்றனா். போலீஸாா் அவா்களைத் தடுத்து நிறுத்தி, அலுவலக வாயிலுக்குப் பூட்டு போட்டனா். இதனால், அவா்கள் கதவின் மீது ஏறி நின்று முழக்கமிட்டபடி போராட்டத்தில் ஈடுபட்டனா்.