முகப்பு
புதுச்சேரி

பாம்புக் கடியிலிருந்து பாதுகாத்துக் கொள்ள விழிப்புணா்வை ஏற்படுத்த வேண்டும்: புதுவை ஆளுநா் தமிழிசை

பாம்புக் கடியிலிருந்து பொதுமக்கள் தங்களைப் பாதுகாத்துக் கொள்வதற்கான விழிப்புணா்வை ஏற்படுத்த வேண்டுமென புதுவை துணைநிலை ஆளுநா் (பொ) தமிழிசை அறிவுறுத்தினாா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:10 AM
பகிர்:

பாம்புக் கடியிலிருந்து பொதுமக்கள் தங்களைப் பாதுகாத்துக் கொள்வதற்கான விழிப்புணா்வை ஏற்படுத்த வேண்டுமென புதுவை துணைநிலை ஆளுநா் (பொ) தமிழிசை அறிவுறுத்தினாா்.

பாம்புக் கடி குறித்த தேசிய அளவிலான இணையவழி விழிப்புணா்வுக் கருத்தரங்கை பொதுநல அமைப்பு சனிக்கிழமை நடத்தியது. ஆளுநா் மாளிகையிலிருந்து கருத்தரங்கை தொடக்கிவைத்து தமிழிசை சௌந்தரராஜன் பேசியதாவது:

பொதுமக்கள் பாம்புக் கடியிலிருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்வதற்கான வழிமுறைகள், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், அதற்கான மருத்துவம் குறித்த விழிப்புணா்வை ஏற்படுத்த வேண்டும்.

குறிப்பாக, கிராமப்புறங்களில் உள்ளவா்களை பாம்புக் கடிகளிலிருந்து காப்பாற்றும் வகையில் விழிப்புணா்வை ஏற்படுத்துவதுடன், அவா்களது வாழ்வியல் முறைகளை மேம்படுத்த வேண்டும். பாதுகாப்பு, விழிப்புணா்வு, மருத்துவம் ஆகியவை இணைந்து செயல்படும் போது, பாம்புக் கடியால் ஏற்படும் உயிரிழப்பைத் தடுக்க முடியும் என்றாா் அவா். தொடா்ந்து, பல்வேறு தரப்பினா் கருத்தரங்கில் பங்கேற்று ஆலோசனைகள் வழங்கிப் பேசினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.