புதுச்சேரி

2 ஆண்டுகளுக்குப் பிறகு புதுச்சேரி-திருப்பதி பயணிகள் ரயில் மீண்டும் இயக்கம்

DIN

புதுச்சேரி: புதுச்சேரி-திருப்பதி இடையே இயக்கப்பட்டு வந்த பயணிகள் ரயில், கரோனா தொற்று பரவல் காரணமாக நிறுத்தப்பட்டது.

இதனையடுத்து இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் திருப்பதி-புதுச்சேரி பயணிகள் ரயில் வெள்ளிக்கிழமை முதல் இயக்கப்படுகிறது. திருப்பதியில் இருந்து வெள்ளிக்கிழமை காலை புறப்பட்டு வந்த ரயில் பிற்பகல் 12.30 மணிக்கு புதுச்சேரிக்கு வந்தடைந்தது.

இந்த ரயில் புதுச்சேரியிலிருந்து பிற்பகல் 2.55 மணிக்கு புறப்பட்டு திருப்பதிக்கு செல்லுகிறது. இனி தினசரி புதுச்சேரியிலிருந்து பிற்பகல் 2.55 மணிக்கு இந்த ரயில் புறப்படும். விழுப்புரம், செங்கல்பட்டு, அரக்கோணம் வழியாக இரவு 11 மணிக்கு திருப்பதியைச் சென்றடைய உள்ளது. இந்த ரயில் தற்போது முன்பதிவு அல்லாத விரைவு ரயிலாக இயக்கப்பட உள்ளது.

இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு புதுச்சேரி-திருப்பதி பயணிகள் ரயில் இயக்கப்படுவது பொதுமக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கமல்ஹாசன் மீது தயாரிப்பாளர் சங்கத்தில் புகார்!

நிதீஷ் ரெட்டி, டிராவிஸ் ஹெட் அரைசதம்: ராஜஸ்தானுக்கு 202 ரன்கள் இலக்கு!

‘நாட்டின் மகள்கள் தோற்றனர். பிரிஜ் பூஷண் வெற்றி’ : சாக்‌ஷி மாலிக் உருக்கம்!

பப்பியோடு விளையாடு! ஹன்சிகா...

ஹனி கேக்..!

SCROLL FOR NEXT