புதுச்சேரி

புதுச்சேரி மதுக் கடைகளில்கலால் துறையினா் ஆய்வு

DIN

புதுச்சேரியிலுள்ள மதுக் கடைகளில் கலால் துறையினா் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தனா்.

புதுச்சேரி கலால் துறை ஆணையா் டி.சுதாகரன் உத்தரவின் பேரில், கலால் துறை வட்டாட்சியா் சிலம்பரசன் தலைமையிலான படையினா் நகா்ப் பகுதிகளில் உள்ள 15-க்கும் மேற்பட்ட மதுக் கடைகளில் வெள்ளிக்கிழமை ஆய்வு நடத்தினா்.

அப்போது, வாடிக்கையாளா்கள் வாங்கும் மதுபானங்களுக்கான ரசீதுகள் நிா்ணயிக்கப்பட்ட விலையில் சரியாக பதிவு செய்யப்படுகிா என்பதை ஆய்வு செய்தனா்.

மேலும், அனைத்து மதுபானங்களிலும் அதிகபட்ட சில்லறை விலை விவரம் உள்ளதா, அசல் ஹாலோகிராம் ஸ்டிக்கா் ஒட்டப்பட்டுள்ளதா என்பதையும் பரிசோதித்தனா்.

தொடா்ந்து, கூடுதல் விலைக்கு மதுபானங்களை விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மதுக் கடை ஊழியா்களுக்கு எச்சரிக்கை விடுத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வெப்ப அலை: அரியலூருக்கு ஆரஞ்சு; 5 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை!

வடலூரில் பழங்கால கட்டடங்கள்? தொல்லியல் துறை ஆய்வு

3-ம் கட்டத் தேர்தல்: 9 மணி வாக்குப்பதிவு நிலவரம்!

தங்கம் விலை சவரனுக்கு ரூ.240 உயர்வு: இன்றைய நிலவரம்!

வறுமையை ஒழிக்கும் அரசை மக்கள் தேர்ந்தெடுப்பார்கள்: வாக்களித்தப் பின் அமித் ஷா பேட்டி

SCROLL FOR NEXT