புதுச்சேரி

புதுவை புதிய தலைமை செயலர் ராஜுவ் வர்மா முதல்வருடன் சந்திப்பு

புதுவை மாநிலத்தின் தலைமை செயலாளராக இருந்த அஸ்வனி குமார், மத்திய உள்துறை அமைச்சகத்தின் உத்தரவின் பேரில்

DIN

புதுச்சேரி: புதுவை மாநிலத்தின் தலைமை செயலாளராக இருந்த அஸ்வனி குமார், மத்திய உள்துறை அமைச்சகத்தின் உத்தரவின் பேரில் தில்லிக்கு பணியிடம் மாற்றம் செய்யப்பட்டார். அருணாசலப் பிரதேச ஐஏஎஸ் அதிகாரியாக பணியாற்றி வந்த ராஜீவ் வர்மா புதுவை தலைமை செயலராக நியமிக்கப்பட்டார்.

இதனையடுத்து புதுவை தலைமை செயலாளராக இருந்த அஸ்வனிகுமார் வெள்ளிக்கிழமை பணியிலிருந்து விடுவிக்கப்பட்டு, புது தில்லி புறப்பட்டுச் சென்றார். இதனைத் தொடர்ந்து புதுவை தலைமை செயலராக ராஜீவ் வர்மா பொறுப்பேற்று கொண்டார். 

இதனையடுத்து சனிக்கிழமை பிற்பகல் புதுவை சட்டப்பேரவை அலுவலகத்துக்கு வந்த புதிய தலைமை செயலர் ராஜீவ் வர்மா, முதல்வர் ரங்கசாமியை மரியாதை நிமித்தமாக சந்தித்தார்.

அப்போது அவருக்கு பூங்கொத்து கொடுத்தும், சால்வை அணிவித்தும் முதல்வர் வாழ்த்து தெரிவித்தார்.

இதைத் தொடர்ந்து வேளாண்துறை அமைச்சர் தேனி ஜெயக்குமார், சட்டப்பேரவை துணைத்தலைவர் ராஜவேலு, எம்எல்ஏக்கள் ஏ.கே.டி.ஆறுமுகம், பி.ரமேஷ், தக்ஷிணாமூர்த்தி, லட்சுமிகாந்தன் உள்ளிட்டோரும் சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

20 வயது இளம் ஆல்ரவுண்டரை ரூ.14 கோடிக்கு ஏலத்தில் எடுத்த சிஎஸ்கே!

அதீத பேட்டரி... டிச. 24-ல் வெளியாகிறது ரியல்மி நர்ஸோ!

கேரள திரைப்பட விழா! மத்திய அரசு அனுமதி மறுத்த படங்களைத் திரையிட முடிவு!

திரையரங்க ஆபரேட்டர்களுக்கு ஜேம்ஸ் கேமரூன் வேண்டுகோள்!

தாய்ப் பாலில், நிலத்தடி நீரில் யுரேனியம்! சிறுநீரக பாதிப்பு ஏற்படுமா?

SCROLL FOR NEXT