புதுச்சேரி

மோட்டார் சைக்கிள் தீப்பிடித்து நெல் வியாபாரி உடல் கருகி பலி

DIN

புதுச்சேரி: புதுச்சேரி அபிஷேகப்பாக்கத்தில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது நடுரோட்டில் தீப்பிடித்ததில் இருசக்கர வாகனமும், அதனை ஓட்டிச் சென்ற நெல் வியாபாரியும் நடுரோட்டிலேயே தீப்பிடித்து எரிந்து பலியானார்.

புதுச்சேரி: புதுச்சேரி கரிக்கலாம்பாக்கம் மாஞ்சாலை பகுதியை சேர்ந்தவர் வேணுகோபால் (வயது 65). இவர் நெல் வியாபாரி. இவருக்கு ஆண்டாள் என்ற மனைவியும், ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். 

இந்த நிலையில் நேற்று இரவு தவளக்குப்பத்தை அடுத்த அபிஷேகப்பாக்கம் பகுதியில் உள்ள சமாதி பஸ் நிறுத்தம் அருகே வேணுகோபால் தனது மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார். 

அப்போது மோட்டார் சைக்கிள் திடீரென தீப்பற்றி எரிந்துள்ளது. இதனால் பதற்றம் அடைந்த வேணுகோபால் மோட்டார் சைக்கிளை நிறுத்த முயன்றபோது அவர் நிலை தடுமாறு கீழே விழுந்தார். இதில் உடல் கருகி சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக பலியானார். மோட்டார் சைக்கிளும் எரிந்து நாசமாயின. 

அந்த வழியாக சென்றவர்கள் இதுபற்றி காவல் துறைக்கு தகவல் தெரிவித்தனர். உடனே தவளக்குப்பம் காவல் உதவி ஆய்வாளர் பிரபு மற்றும் காவலர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். தீயணைப்பு வீரர்களும் அங்கு வந்து, மோட்டார் சைக்கிளில் பற்றிய தீயை அணைத்தனர். பின்னர் கருகிய நிலையில் இருந்த வேணுகோபால் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கதிர்காமம் அரசு மருத்துவமனை அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையில் சம்பவம் நடந்த இடம் ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியாகும். இங்கு வழிப்பறி செய்யும் நோக்கில் வேணுகோபாலை மர்மநபர்கள் வழிமறித்து கொலை செய்து எரித்தனரா? என்ற கோணத்திலும் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மோட்டார் சைக்கிளுடன் வேணுகோபால் சாலையில் தீப்பிடித்து எரியும் விடியோ வைரலாகி பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மாநில சிலம்பம் போட்டியில் சங்ககிரியைச் சோ்ந்த மாணவா்கள் வெற்றி

ஈரான் மீன்பிடிப் படகு கேரளத்தில் தடுத்து நிறுத்தம்: 6 தமிழா்களை கடலோர காவல் படை கைது செய்து விசாரணை

ஏற்ற இறக்கத்தில் பங்குச்சந்தை: சிறிதளவே உயா்ந்தது சென்செக்ஸ்!

கல்வித் துறையில் தொடா் முன்னேற்றம், இந்தியாவை விக்சித் பாரத்க்கு நெருக்கமாகக் கொண்டு செல்கிறது: குடியரசுத் துணைத் தலைவா் ஜகதீப் தன்கா் பெருமிதம்

தில்லியில் கொலை வழக்கு கைதி போலீஸ் பிடியில் இருந்து தப்பினாா்

SCROLL FOR NEXT