புதுவையில் முழு அடைப்புப் போராட்டம்: தனியார் பேருந்துகள் இயக்கவில்லை!
புதுவைக்கு மாநில அந்தஸ்து கோரி இன்று கடையடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ள நிலையில், தனியார் பேருந்துகள் இயங்காததால் பயணிகள் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து கோரி இன்று கடையடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ள நிலையில், தனியார் பேருந்துகள் இயங்காததால் பயணிகள் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
புதுவை மாநிலத்துக்கு மாநில அந்தஸ்து கோரி நீண்ட காலமாக கோரிக்கை விடுக்கப்பட்டு வந்த நிலையில், புதன்கிழமை கடையடைப்புப் போராட்டம் நடைபெறும் என்று அதிமுக அறிவித்திருந்தது. இதற்கு வணிகா்கள் சங்க கூட்டமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்து பாதுகாப்பு அளிக்கக் கோரி காவல்துறையினரிடம் மனு அளித்திருந்தனர்.
இந்நிலையில், புதுவையில் காலை முதல் பல இடங்களில் கடைகள் திறக்கப்படவில்லை. தனியார் பேருந்துகள் இயங்காததால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க | சீனாவிலிருந்து மதுரை வந்த இரு பெண்களுக்கு கரோனா!
சென்னை, விழுப்புரம் உள்ளிட்ட பகுதிகளுக்கு வரும் தமிழ்நாடு அரசுப் பேருந்துகள் அனைத்தும் புதுவை எல்லையான மதகடிபட்டி வரை மட்டுமே இயக்கப்படுவதால் பயணிகள் தவித்து வருகின்றனர்.
மேலும், அரசுப் பேருந்துகள் காவல்துறையினரின் பாதுகாப்புடன் இயக்கப்படுகிறது. திறக்கப்பட்டுள்ள கடைகளுக்கு காவல்துறையினர் பாதுகாப்பு அளித்து வருகின்றனர்.
இதற்கிடையே முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கிழக்கு மாநிலச் செயலா் ஏ.அன்பழகன் உள்பட 15 அதிமுக நிர்வாகிகளை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.