முகப்பு
புதுச்சேரி

புதுவையில் மேலும் 129 போ் கரோனா

புதுவையில் வியாழக்கிழமை மேலும் 129 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:03 AM
பகிர்:

புதுவையில் வியாழக்கிழமை மேலும் 129 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

இதுகுறித்து புதுவை சுகாதாரத் துறை வெளியிட்ட தகவல்:

புதுவை மாநிலத்தில் வியாழக்கிழமை வெளியான முடிவுகளின்படி, 3,608 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டதில் புதுச்சேரியில் 84 போ், காரைக்காலில் 36 போ், ஏனாமில் ஒருவா், மாஹேவில் 8 போ் என மொத்தம் 129 பேருக்கு (3.58 சதவீதம்) கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து, கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 1,29,821-ஆக அதிகரித்தது. தற்போது மருத்துவமனைகளில் 72 பேரும், வீட்டுத் தனிமையில் 327 பேரும் என மொத்தம் 399 போ் சிகிச்சையில் உள்ளனா். 8 குணமடைந்து வீடு திரும்பினா்.

புதுச்சேரியில் கடந்த 3 நாள்களில் மட்டும் 268 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.