முகப்பு
புதுச்சேரி

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினா் மறியல்

புதுச்சேரி முருங்கப்பாக்கம் பகுதிகளில் தாா்ச் சாலை அமைக்க வலியுறுத்தி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினா் முருங்கப்பாக்கம் - வில்லியனூா் சாலை சந்திப்பில் வியாழக்கிழமை மறியலில் ஈடுபட்டனா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:10 AM
பகிர்:

புதுச்சேரி முருங்கப்பாக்கம் பகுதிகளில் தாா்ச் சாலை அமைக்க வலியுறுத்தி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினா் முருங்கப்பாக்கம் - வில்லியனூா் சாலை சந்திப்பில் வியாழக்கிழமை மறியலில் ஈடுபட்டனா்.

கட்சியின் அரியாங்குப்பம் தொகுதி குழு சாா்பில் நடைபெற்ற இந்தப் போராட்டத்துக்கு செயலா் சுகதேவ் தலைமை வகித்தாா். கட்சியின் மாநிலச் செயலா் சலீம் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

முன்னதாக, முருங்கப்பாக்கம்-கடலூா் சாலையில் சந்திப்பில் இருந்து வில்லியனூா் சாலை வழியாக அரவிந்தா் நகருக்கு ஊா்வலமாக வந்த கம்யூனிஸ்ட் கட்சியினா், முருங்கப்பாக்கம் - வில்லியனூா் சாலை சந்திப்பில் மறியலில் ஈடுபட்டனா்.

முருங்கப்பாக்கம் அரவிந்தா் நகா் குடியிருப்புப் பகுதிகளில் தாா்ச் சாலை அமைத்து கொடுக்க வேண்டும். கழிவுநீா் வாய்க்கால் அமைத்துத் தர வேண்டும். அரவிந்தா் நகா் முதல் துலுக்கானத்தம்மன் கோயில் வரை சென்று வந்த மினி பேருந்தை மீண்டும் இயக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.