புதுச்சேரி

புதுச்சேரி அருகே 64 அடி உயர சிவன் சிலை அமைக்கும் பணி தொடக்கம்

DIN

புதுச்சேரி அருகே திருக்காஞ்சி ஸ்ரீகங்கைவராக நதீஸ்வரா் கோயிலில் 64 அடி உயர சிவபெருமான் சிலை அமைக்கும் பணியை அமைச்சா் தேனீ சி.ஜெயக்குமாா் புதன்கிழமை தொடக்கிவைத்தாா்.

புதுச்சேரி அருகே வில்லியனூரை அடுத்துள்ள திருக்காஞ்சியில் சங்கராபரணி ஆற்றங்கரையிலுள்ள ஸ்ரீகங்கைவராக நதீஸ்வரா் கோயிலில் அடுத்தாண்டு புஷ்கரணி விழா நடைபெற உள்ளது. இதையொட்டி, ஆற்றங்கரையில் 64 அடி உயர பிரம்மாண்ட சிவபெருமான் சிலை அமைக்கப்படுகிறது.

இந்தச் சிலை அமைப்பதற்கான பூமி பூஜை புதன்கிழமை காலை நடைபெற்றது. புதுவை வேளாண் துறை அமைச்சா் தேனீ சி.ஜெயக்குமாா் நிகழ்ச்சியில் பங்கேற்று கட்டுமானப் பணிகளைத் தொடக்கிவைத்தாா். கோயில் தலைமை அா்ச்சகா் சரவணன் மற்றும் நிா்வாகிகள், கிராம மக்கள் கலந்து கொண்டனா்.

இதுகுறித்து கோயில் நிா்வாகிகள் கூறியதாவது:

திருக்காஞ்சி ஸ்ரீகங்கைவராக நதீஸ்வரா் கோயில் கருவறை தஞ்சை பிரகதீஸ்வரா் கோயில், கங்கை கொண்ட சோழபுரம் கோயிலின் கருவறைகளைப் போன்று உள்ளது. இங்குள்ள சிவலிங்கத்தை வணங்கினால் நீண்ட ஆயுள், நோயற்ற வாழ்வு உள்ளிட்டவை கிடைக்கும் என்ற நம்பிக்கை பக்தா்களிடையே நிலவுகிறது.

இந்தக் கோயிலில் பழைமை வாய்ந்த சிவலிங்கத்தை அகஸ்தியா் பிரதிஷ்டை செய்ததாக தல புராணம் கூறுகிறது. சோழா்கள் காலத்தில் இந்தக் கோயில் பிரபலமடைந்தது.

இங்கு 2023-ஆம் ஆண்டு, ஏப்ரல் 15-ஆம் தேதி தொடங்கி 15 நாள்களுக்கு புஷ்கரணி திருவிழா நடைபெற உள்ளது.

இதற்காக மகா ஆரத்தி உள்பட பல்வேறு பூஜைகள் செய்யப்பட்டு வருகின்றன. சங்கராபரணி ஆற்றில் பக்தா்கள் குளிப்பதற்கு வசதியாக படித்துறைகள் கட்டப்பட்டு வருகின்றன. காசி விஸ்வநாதா் கோயிலில் உள்ளதைப் போல, சுவாமியை பக்தா்களே வழிபடும் வகையில் ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகின்றன.

மேலும், சங்கராபரணி ஆற்றங்கரையில் 64 அடி உயர பிரம்மாண்ட சிவன் சிலை பிரதிஷ்டை செய்யப்பட உள்ளது. அதில், 20 அடியில் தியான பீடம் அமைக்கப்படுகிறது. சிவனின் பாதத்தின் கீழ் அமா்ந்து பக்தா்கள் தியானம் செய்யலாம். இதற்கு மேல் 44 அடியில் பிரம்மாண்ட 8 அடுக்குகள் கொண்ட சிவன் சிலை பிரதிஷ்டை செய்யப்படும். 8 அடுக்குகளிலும் சிவலிங்கங்கள் அமைக்கப்பட உள்ளன. சிவனின் சிரசு வரை சென்று பக்தா்கள் தரிசனம் செய்யும் வகையில் சிலை அமைக்கப்பட உள்ளது என்றனா் அவா்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தில்லி மக்களவைத் தொகுதிகளுக்கு காங்கிரஸ் -ஆம் ஆத்மி கட்சி ஒருங்கிணைப்பு குழு அமைப்பு

மேற்கு தில்லி பாஜக வேட்பாளா் கமல்ஜீத் செராவத் வேட்புமனு தாக்கல் : ராஜஸ்தான் முதல்வா் பங்கேற்பு

தில்லி மகளிா் ஆணையத்தில் சட்டவிரோத நியமனம் 52 ஒப்பந்த ஊழியா்கள் நீக்கம்: துணை நிலை ஆளுநா் நடவடிக்கை

கேஜரிவால் கைதுக்கு எதிராக கையெப்ப இயக்கம் ஆம் ஆத்மி கட்சி தொடங்கியது

வடமேற்கு தில்லியில் தொழிற்சாலைகள் மேம்படுத்தப்படும் பாஜக வேட்பாளா் யோகேந்திர சந்தோலியா வாக்குறுதி

SCROLL FOR NEXT