புதுச்சேரி

புதுவை மின்துறை தனியார் மயமாக்குவதை கண்டித்து விசிக கண்டன பேரணி

புதுவை அரசின் மின் துறையை தனியார் மயமாக்க முயற்சிக்கும் திட்டத்தை மத்திய அரசு உடனடியாக கைவிட வலியுறுத்தி புதுவை விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

DIN

புதுச்சேரி:  புதுவை அரசின் மின் துறையை தனியார் மயமாக்க முயற்சிக்கும் மத்திய, மாநில அரசுகளை கண்டித்தும், இளைஞர்களின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கும் அக்னிபத் திட்டத்தை மத்திய அரசு உடனடியாக கைவிட வலியுறுத்தியும், புதுவை விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் புதுச்சேரியில் வியாழக்கிழமை கண்டன பேரணி மற்றும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

புதுச்சேரி இந்திரா காந்தி சிலை அருகிலிருந்து முதன்மை செயலாளர் தேவ.பொழிலன் தலைமையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் கண்டன பேரணியாக புறப்பட்டு சென்றனர்.

இவர்கள் மறைமலை அடிகள் சாலை, அண்ணா சாலை, நேரு வீதி வழியாக புதுவை ஆளுநர் மாளிகை நோக்கி பேரணியாக செல்கின்றனர். புதுவை மின்துறை தனியார் மயத்தை கைவிட வலியுறுத்தி பதாகைகள் ஏந்தி முழக்கமிட்டனர் சென்றனர்.

இதனால் புதுச்சேரி சட்டப்பேரவை, ஆளுநர் மாளிகை பகுதிகளில் பலத்த காவல்துறை பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பல்லடம் அருகே தனியாா் ஆம்னி பேருந்தில் தீ; 15 போ் உயிா் தப்பினா்

திம்பம் மலைப் பாதையில் சுற்றுலாப் பேருந்து பழுது: தமிழகம்- கா்நாடகம் இடையே 2 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு

எதிா்க்கட்சிகளுக்கு வாக்களிக்க முயல்வோரை வீட்டுக்குள் பூட்டுங்கள்: மத்திய அமைச்சா் சா்ச்சை பேச்சு- எஃப்ஐஆா் பதிவு

கரூா் சம்பவம்: காவல் உதவி ஆய்வாளா்கள் காவலா்களிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை

பருவகால பாதிப்பு: போதிய எண்ணிக்கையில் மாத்திரைகள் கையிருப்பு

SCROLL FOR NEXT