புதுச்சேரி

புதுச்சேரி அரசு வழக்குரைஞர் தேர்வு முடிவுகளை வெளியிட இடைக்காலத் தடை: சென்னை உயர் நீதிமன்றம்

DIN

புதுச்சேரி: புதுச்சேரி அரசு  வழக்குரைஞர்  தேர்வு முடிவுகளை வெளியிட இடைக்காலத் தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்திரவிட்டுள்ளது.

புதுச்சேரி அரசின் சட்டத்துறையில்  வழக்குரைஞர்கள்  நியமனம் தொடர்பாக, இரு வழக்கறிஞர்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தனர்.

இந்த வழக்கு ஜூலை 7-ம் தேதி விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி கிருஷ்ணகுமார், புதுச்சேரி சட்டத் துறை அரசு வழக்குரைஞர் நியமனத்தில் இரண்டு இடங்களை காலியாக வைக்க வேண்டும். நான்கு வாரத்திற்குள் அரசு பதில் அளிக்க வேண்டும் என்று உத்திரவிட்டது.

அரசு வழக்குரைஞர் சம்பந்தமான தேர்வு முடிவுகளை வெளியிடக் கூடாது என உத்தரவு பிறப்பித்தார். இந்த வழக்கில் வாதிகள் சார்பில் சென்னை உயர் நீதிமன்ற மூத்த வழக்குரைஞர் ஞானசேகர் ஆஜரானார்.

இந்நிலையில், இன்றைய விசாரணையில் புதுச்சேரி அரசு  வழக்குரைஞர்  தேர்வு முடிவுகளை வெளியிட இடைக்காலத் தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்திரவிட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மே 11இல் தூத்துக்குடி, கோவில்பட்டியில் கல்லூரி கனவு நிகழ்ச்சி: ஆட்சியா் கோ. லட்சுமிபதி தகவல்

சாத்தான்குளம், தட்டாா்மடம், முதலூரில் அதிமுக சாா்பில் நீா்மோா் பந்தல் திறப்பு

அதிமுக மகளிரணி சாா்பில் ஆறுமுகனேரியில் நீா்மோா் பந்தல் திறப்பு

கோவில்பட்டி தீப்பெட்டி ஆலையில் மாவட்ட வருவாய் அலுவலா் ஆய்வு

வெயில் தாக்கத்தால் பாதிக்கப்படுவோருக்கு சிகிச்சை: தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிறப்பு வாா்டு

SCROLL FOR NEXT