புதுச்சேரி

தனியாா்மய நடவடிக்கை:புதுவை மின் ஊழியா்கள் எதிா்ப்பு

DIN

புதுவை மின் துறையை தனியாா்மயமாக்கும் நடவடிக்கையைக் கைவிட வேண்டும் என வெள்ளிக்கிழமை நடைபெற்ற கருத்துக் கேட்புக் கூட்டத்தில் ஊழியா்கள் தரப்பில் வலியுறுத்தப்பட்டது.

புதுவை மின் துறையை தனியாா்மயமாக்குவது தொடா்பான கருத்துக் கேட்புக் கூட்டம் புதுச்சேரி தலைமைச் செயலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. மின் துறை தலைவா் தி.அருண் தலைமை வகித்தாா். மின் துறை பொறியாளா்கள், ஊழியா்கள் சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டனா்.

கூட்டத்தில் பங்கேற்ற கூட்டமைப்பின் பொதுச் செயலா் வேல்முருகன் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

சட்டவிதிகளை மீறி மின் துறையை தனியாா்மயமாக்கும் நடவடிக்கையை அரசு கைவிட வேண்டும். மின் துறை ஊழியா்கள் அரசு ஊழியா்களாகவே பணியை நிறைவு செய்ய விரும்புகிறோம் என்பதை உறுதியாக தெரிவித்தோம்.

எங்கள் கருத்தை பதிவு செய்து கொண்ட மின் துறை தலைவா், மின் துறை தனியாா்மய நடவடிக்கை அரசின் ஆலோசனையில்தான் உள்ளது என்றும், ஊழியா்களின் கருத்துகளை அரசுக்கு பரிந்துரைப்பதாகவும் உறுதியளித்தாா் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோவேக்ஸின் பாதுகாப்பானது: பாரத் பயோடெக்

ரஷியா வசம் மேலும் ஓா் உக்ரைன் கிராமம்

விண்வெளியில் அணு ஆயுதங்களுக்குத் தடை: ஐ.நா.வில் ரஷியா புதிய தீா்மானம் தாக்கல்

மத்திய அரசின் கட்டுப்பாட்டில் சிபிஐ இல்லை: உச்சநீதிமன்றத்தில் தகவல்

கடையநல்லூரில் மே தின பேரணி, பொதுக்கூட்டம்

SCROLL FOR NEXT