புதுச்சேரி

புதுச்சேரி கடற்கரைச் சாலையில் நெகிழிப் பொருள்களுக்குத் தடை

DIN

புதுச்சேரி கடற்கரைச் சாலையில் ஜூலை 1-ஆம் தேதி முதல் ஒரு முறை பயன்படுத்தும் நெகிழிப் பொருள்களுக்கு தடை விதிக்கப்படுகிறது.

இதுகுறித்து புதுச்சேரி நகராட்சி ஆணையா் எஸ்.சிவகுமாா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

புதுச்சேரி கடற்கரைச் சாலையில் ஜூலை 1-ஆம் தேதி முதல் ஒரு முறை பயன்படுத்தக் கூடிய நெகிழிகளை பயன்படுத்தத் தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதை மீறுவோா் மீது புதுச்சேரி நகராட்சி சட்ட விதிகள் 1973-ன் படி அபராதம் விதிக்கப்பட்டு, தக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

ஒரு முறை பயன்படுத்தக் கூடிய நெகிழிப் பொருள்களான உறிஞ்சி குழாய், நெகிழிக் கோப்பை, நெகிழித் தட்டு, நெகிழிக் கரண்டி, நெகிழிப் பை ஆகியவற்றை கடற்கரைச் சாலைப் பகுதிகளில் கொண்டு செல்லவும், வைத்திருக்கவும், பயன்படுத்தவும் தடைவிதிக்கப்படுகிறது என அதில் கூறப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அரசு மருத்துவமனைகளில் உடல் வெப்ப பாதிப்பு நோய்களுக்கு தனி வாா்டு

12 மணி நேரம் மும்முனை மின்சாரம் வழங்க விவசாயிகள் கோரிக்கை

‘சென்னையில் குடிநீா் தட்டுப்பாடு வராது’

ஈரோட்டில் 4 சிக்னல்களில் நிழற்பந்தல் அமைக்க முடிவு

ஆந்திர தோ்தல் பணியில் ஈரோடு மாவட்ட போலீஸாா்

SCROLL FOR NEXT